தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இலக்குக்கு ஏற்ப 5 முக்கிய பிரிவுகள்

 இலக்குக்கு ஏற்ப 5 முக்கிய பிரிவுகள்

 இலக்குக்கு ஏற்ப 5 முக்கிய பிரிவுகள்


UPDATED : ஆக 05, 2026 02:14 AM

ADDED : ஆக 05, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 02:14 AM ADDED : ஆக 05, 2026 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.ஐ.எப்.,பில் முதலீட்டாளர்களின் இலக்குகள் மற்றும் அபாய திறனுக்கு ஏற்ப 5 முக்கிய பிரிவுகள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

1 ஈக்விட்டி எக்ஸ் -டாப் 100: இந்த நிதி முதல் 100 'லார்ஜ் கேப்' நிறுவனங்களை தவிர்த்து 101வது இடத்தில் உள்ள நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. திரட்டப்படும் பணத்தில் குறைந்தபட்சம் 75 சதவீதம் பங்கிலும், மீதி 25 சதவீதம் பாதுகாப்பான வழிகளிலும் முதலீடு செய்யப்படும்.

Image 1605734
யாருக்கு ஏற்றது?



* டாப் 100 நிறுவனங்களை வைத்துள்ளவர்கள்

* அதிக லாபம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள்

2 மிட் மற்றும் ஸ்மால் கேப்: நிதியின் பெரும்பகுதி எதிர்காலத்தில் பெரிய நிறுவனங்களாக வளரும் சாத்தியக்கூறு கொண்ட 'மிட் மற்றும் ஸ்மால் கேப்' நிறுவன பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. அதே நேரத்தில், சிறிய பங்குகளின் அதிக ஏற்ற இறக்கத்தால் வரும் அபாயத்தை குறைக்க 25 சதவீத நிதி ஒதுக்கீட்டை பாதுகாப்பிற்கு பயன்படுத்தும்.

யாருக்கு ஏற்றது?

* நீண்ட கால இலக்கு உள்ளவர்கள்

* இளம் தலைமுறை முதலீட்டாளர்கள்



3 ஹைபிரிட்: சந்தை உச்சத்தின் போது பங்குகளை குறைத்து கடன் பத்திரங்களிலும் வீழ்ச்சியின் போது, குறைந்த விலையில் பங்குகளை வாங்க நிதியை மாற்றி மாற்றி பயன்படுத்தி நிலையான வருமானத்தை தரும்.

யாருக்கு ஏற்றது?

* மிதமான ஆபத்தை விரும்புபவர்கள்

* ஏற்ற இறக்கங்களை சகித்துக்கொள்ள முடியாதவர்கள்

4 செக்டார் ரொட்டேஷன்: சந்தையின் குறிப்பிட்ட காலத்தில் வேகமாக வளரும் துறை சார்ந்த பங்குகளில் மாறி மாறி முதலீடு செய்யும் நுட்பத்தை கொண்டது. மேலும் மந்தமான நிலைக்கு செல்லும் துறைகளின் பங்குகளை 'ஷார்ட்' செய்வதன் வாயிலாக வருமானம் ஈட்டும்.

யாருக்கு ஏற்றது?

* சந்தையை விட கூடுதல் லாபம் எதிர்பார்ப்பவர்கள்

*துறை சார்ந்த மாற்றங்களை கண்காணிக்க நேரமில்லாதவர்கள்

5 டெப்ட்: வழக்கமான டெப்ட் மியூச்சுவல் பண்டுகளை விட இதில் பண்டு மேனேஜருக்கு வட்டி மாற்றங்களை எதிர்கொள்ளவும், கடன் பத்திர அபாயங்களை நிர்வகிக்கவும் கூடுதல் சுதந்திரமும் சிறப்பு உத்திகளும் உண்டு. அரசு மற்றும் முன்னணி நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து நிலையான வருமானம் தரும்.

யாருக்கு ஏற்றது?

* முதலீட்டு முதலுக்கு பாதுகாப்பு விரும்புபவர்கள்

* வங்கி பிக்சட் டிபாசிட்டை விட சிறந்த மாற்று எதிர்பார்ப்பவர்கள்

(தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us