டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி 24,500க்கு மேலே இருக்கும் வரை ஏற்றம் தொடரக்கூடும்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி 24,500க்கு மேலே இருக்கும் வரை ஏற்றம் தொடரக்கூடும்
UPDATED : ஆக 05, 2026 02:14 AM
ADDED : ஆக 05, 2026 12:41 AM

நேற்று 70 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி, நாளின் இறுதியில் 159 புள்ளிகள் சரிவுடனே முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 4 ஏற்றத்துடனும்; 14 இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டிமைக்ரோ கேப் 250' குறியீடு அதிக பட்சமாக 0.43 சதவீத உயர்வுடனும், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.62 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 3 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 18 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிக பட்சமாக 2.03 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிக பட்சமாக 2.39 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,434 நிறுவனங்களின் பங்குகளில் 1,601 ஏற்றத்துடனும்; 1,708 இறக்கத்துடனும்; 125 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
நிப்டி முக்கிய குறுகிய கால மற்றும் மத்திம கால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்துள்ளது. மொமென்டம் இண்டிக்கேட்டர்கள் ஏற்றத்திற்கு சற்று ஆதரவாக இருக்கின்றன.
ஆர்.எஸ்.ஐ., 61.77 என்ற நிலையிலும், எம்.ஏ.சி.டி., புல்லிஷ் க்ராஸ் ஓவரிலும் இருப்பது ஏற்றத்திற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் (88.83) என்ற அளவில் இருப்பதால் சற்று ஓவர் பாட்டாக தெரிகிறது.
![]() |
இதனால் கன்சாலிடேஷனோ அல்லது லாபத்தை வெளியே எடுக்கும் அளவிலான விற்பனையோ வருவதற்கு வாய்ப்புள்ளது எனலாம். 24,700-24,773ல் உடனடி ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது. 24,500 முதல் சப்போர்ட்டாக இருக்கிறது. 24,773க்கு மேலே சென்றால் 24,900-25,000 வரை செல்லக்கூடும்.
மொத்தத்தில், 24,500க்கு மேல் இருக்கும் வரை டெக்னிக்கலாக நிப்டியின் குறுகிய கால ஏற்ற அமைப்பு தொடர வாய்ப்புள்ளது எனலாம்.

