புதிய பங்கு வெளியீட்டில் ஆதிக்கம் செலுத்திய 5 துறைகள்
புதிய பங்கு வெளியீட்டில் ஆதிக்கம் செலுத்திய 5 துறைகள்
UPDATED : டிச 27, 2025 01:16 AM
ADDED : டிச 27, 2025 01:15 AM

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் களைகட்டி வரும் நிலையில், நடப்பாண்டில் ஐந்து துறைகள் மட்டுமே இதில் பாதிக்கும் மேலான பங்களிப்பை வழங்கியுள்ளதாக, 'மோதிலால் ஓஸ்வால்' நிறுவனத்தின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
அதன் முக்கிய அம்சங்கள்:
கடந்த 2024ம் ஆண்டு ஐ.பி.ஓ., வெளியீட்டில் வாகனத் துறை முன்னணியில் இருந்த நிலையில், நடப்பாண்டில் நிதி சேவை நிறுவனங்கள் முதன்மை சந்தையை கைப்பற்றியுள்ளன.

கடந்த ஆண்டில் 18 சதவீதம் நிதி திரட்டிய டெலிகாம், யூட்டிலிட்டி மற்றும் தனியார் வங்கி துறைகள், நடப்பாண்டில் ஒரு ஐ.பி.ஓ., கூட வெளியிடவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

