ADDED : நவ 16, 2025 10:10 PM

உங்கள் கிரெடிட் கார்டை வேறு எவரும் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க, இந்த விதிகளைக் கடைப்பிடியுங்கள்:
கணக்கை பரிசோதியுங்கள்: உங்கள் கார்டின் எண், சி.வி.வி., எண், பின் நம்பர் ஆகியவற்றை எவருடனும் பகிராதீர்கள். இவற்றை எந்த வங்கியும் தொலைபேசி, இ - மெயில் மூலம் கேட்பதில்லை. அவ்வாறு கேட்டால், அது சந்தேகத்துக்குரியது தான். அடிக்கடி கிரெடிட் கார்டு கணக்கு அறிக்கையைப் பரிசோதியுங்கள். பரிச்சயமில்லாத, சந்தேகத்துக்கிடமான வரவு - செலவு ஏதும் இருந்தால், உடனே புகார் அளித்து, இழப்பிலிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.
2. இலவச வைபை வேண்டாம்
“https என்று துவங்கும் யு.ஆர்.எல்.,ஐ கொண்ட இணையதளங்களில் மட்டுமே பணம் செலுத்தி ஷாப்பிங் செய்யுங்கள். பொது இடங்களில் இலவசமாகக் கிடைக்கும் வைபை வசதியைப் பயன்படுத்தி ஆன்லைன் பரிவர்த்தனை வேண்டாம். கூடுதல் பாதுகாப்பு வேண்டுமென்றால், விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்தால், உங்களது கிரெடிட் கார்டுகளின் தகவல்கள் மறைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
3.அலெர்ட் தகவலை பாருங்கள்:
பெரும்பாலான வங்கிகள் உங்களது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எஸ்.எம்.எஸ்., அல்லது இ - மெயில் மூலம் தகவல் அனுப்புகின்றன. இந்த நோட்டிபிகேஷன்கள் உங்களை வந்தடையுமாறு செய்துகொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால், உங்கள் அனுமதியின்றி ஏதேனும் பரிவர்த்தனை நடைபெற்றால் உடனே உங்களின் கவனத்துக்கு வந்துவிடும்.
4. நவீன கார்டுக்கு மாறலாம்:
தற்போது அறிமுகமாகும் கிரெடிட் கார்டுகள், இரு முறை அடையாள சரிபார்ப்பு வசதி, செலவழிக்கும் தொகைக்கான வரம்பு நிர்ணயம், பயோமெட்ரிக் சரிபார்ப்பு, இ.எம்.வி., சிப் என்று பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கின்றன. வழக்கமான மேக்னடிக் கார்டுகளைவிட இவற்றில் பாதுகாப்பு அதிகம்.
5. கத்தரித்து அழித்து விடுங்கள்:
உங்கள் கிரெடிட் கார்டு உங்களிடம் மட்டுமே இருக்கட்டும். வேறு எவருக்கும் அதைப் பயன்படுத்த தர வேண்டாம். ஏ.டி.எம்., கடைகளில் ஸ்கிம்மிங் கருவியைப் பொருத்தி தகவல் திருட வாய்ப்புண்டு என்பதால் கவனம் தேவை. அதேபோல, பழைய கணக்கு அறிக்கைகள், ரசீதுகளைத் துண்டுதுண்டாகக் கத்தரித்து அழித்துவிடுங்கள்.

