UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 11:06 PM

இ ந்திய ஐ.பி.ஓ., சந்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவடைந்து வரும் நிலையில், நடப்பு 2026ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், மொத்தம் 63 நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளன.
இருப்பினும், முதலீட்டாளர்கள் வெறும் பட்டியல் நாளில் கிடைக்கும் லாபத்தை மட்டும் எதிர்பார்க்காமல், நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டும் நிதியை கடன் அடைக்க பயன்படுத்துகிறதா அல்லது தொழிலை விரிவுபடுத்த பயன்படுத்துகிறதா என்பதை ஆராய்ந்து நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய வேண்டும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய விபரங்கள்
கடந்த மூன்றாம் காலாண்டில் மட்டும் ஐ.பி.ஓ.,க்கள் வாயிலாக 87,680 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. 2026ல் இதுவரை திரட்டப்பட்ட மொத்த தொகை 1,09,186 கோடி ரூபாய்
செப்டம்பரில் மட்டும் 32 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டன. அந்த மாதத்தின் 17ம் தேதி அன்று மட்டும் ஆறு நிறுவனங்கள் பட்டியலாகின
63 ஐ.பி.ஓ.,க்களில் 49 நிறுவனங்கள் முதலீட் டாளர்களுக்கு பட்டியல் தினத்தில் லாபத்தை வழங்கியுள்ளன. குறிப்பாக ஐந்து நிறுவனங்கள் 75 சதவீதத்துக்கும் அதிகமான லாபத்தை தந்துள்ளன.
செப்டம்பர் மாதத்தில் சராசரியாக ஐ.பி.ஓ.,க்கள் 61 மடங்கு சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளன
ஐ.பி.ஓ.,வில் திரட்டப்பட்ட நிதியானது 48 சதவீதம் நிறுவனங்களின் பழைய கடன்களை அடைக்கவும், 16 சதவீதம் பொதுவான வணிக தேவைகளுக்கும், 12 சதவீதம் நடைமுறை மூலதனத்திற்கும், 10 சதவீதம் மூலதன செலவுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
