UPDATED : அக் 24, 2026 02:25 AM
ADDED : அக் 23, 2026 11:06 PM

டான்போ இமேஜிங் பங்கு
66% லாபத்தில் பட்டியலானது
பா துகாப்பு துறைக்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும் 'டான்போ இமேஜிங்' நிறுவனத்தின் பங்குகள் நேற்று 1,160 ரூபாய்க்கு என்.எஸ்.இ., சந்தையில் பட்டியலிடப்பட்டன. இது ஐ.பி.ஓ., விலையான 700 ரூபாயை விட கிட்டத்தட்ட 66 சதவீதம் அதிகம். மேலும் வர்த்தகம் தொடங்கிய பிறகு அதிகபட்சமாக 1,211 ரூபாய் வரை பங்கு விலை உயர்ந்தது. வர்த்தக முடிவில் 1,133.80 ரூபாய்க்கு நிலைபெற்றது.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி
பங்கு விலை 7% வீழ்ச்சி
எ லக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து வரும் 'ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி' நிறுவனத்தின் பங்குகளை விற்கலாம் என்று சர்வதேச தரகு நிறுவனமான 'கோல்டுமேன் சாக்ஸ்' பரிந்துரை வழங்கியுள்ளது. மேலும், இலக்கு விலையை 23 ரூபாயாக குறைத்துள்ளது. இதனால், நேற்று வர்த்தகத்தில் ஓலா எலக்ட்ரிக் பங்கு விலை 7 சதவீதத்துக்கு மேல் இறங்கி ஆறு மாதங்களில் இல்லாத சரிவை எட்டியுள்ளது.
ஸ்விக்கி சந்தை மதிப்பு
ரூ.10,000 கோடி சரிவு
உ ணவு டெலிவரி சேவைகளை வழங்கும் 'ஸ்விக்கி' நிறுவனம், செப்டம்பர் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்ட பிறகு, பல்வேறு தரகு நிறுவனங்கள் ஸ்விக்கி பங்குகளுக்கான இலக்கு விலையை குறைத்துள்ளன. இதனால், நேற்று ஒரே நாளில் ஸ்விக்கி பங்கு விலை கிட்டத்தட்ட 17 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, 52 வாரங்களில் இல்லாத சரிவை எட்டியுள்ளது. மேலும், நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
அரசு கடன் பத்திரங்களில்
வருமானம் 7.48% ஆக உயர்வு
இந் திய அரசின் 10 ஆண்டு கடன் பத்திரங்களின் வருமானம் நேற்று 7.48 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், 10 ஆண்டு அமெரிக்க கடன் பத்திரங்களுக்கும், இந்திய பத்திரங்களுக்கும் இடையேயான வருமான இடைவெளி ஏறக்குறைய 2.51 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது 10 ஆண்டு அமெரிக்க பத்திரங்களில் தோராயமாக 4.97 சதவீத வருமானம் கிடைக்கிறது.
