'ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்' நீக்கத்தால் 6.50 லட்சம் பங்குதாரர்கள் பாதிப்பு
'ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ்' நீக்கத்தால் 6.50 லட்சம் பங்குதாரர்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 17, 2026 04:04 AM

'ஜெ ய்பிரகாஷ் அசோசியேட்ஸ்' நிறுவனம் கட்டுமானம், ரியல் எஸ்டேட், பவர், ஹோட்டல் போன்ற தொழில்களை செய்கிறது. இந்நிறுவனத்தை திவால் தீர்வு நடவடிக்கை வாயிலாக அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.
எனவே, ஜெய்பிரகாஷ் நிறுவனத்தை பங்கு சந்தைகளில் இருந்து பட்டியல் நீக்கம் செய்வதற்கு என்.எஸ்.இ., - பி.எஸ்.இ., நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இதை தொடர்ந்து நாளை (ஜூன் 18) பங்கு சந்தைகளில் இருந்து ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பட்டியல் நீக்கம் செய்யப்படுகிறது.
திவால் தீர்வு நடவடிக்கை வாயிலாக பட்டியல் நீக்கம் நடைபெறுவதால், பங்குதாரர்களிடம் உள்ள அனைத்து பங்குகளும் மொத்தமாக ரத்து செய்யப்படும். அவர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காது. இதனால், கிட்டத்தட்ட 6.50 லட்சம் பங்குதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர். பங்கு சந்தைகளில் ஏற்கனவே இந்த பங்கின் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
