UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 11:14 PM
28.10.26 ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 22,678.00 22,778.05 22,497.70 22,698.85
நிப்டி 71 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கி, 10.30 மணியளவில் –252 வரையிலான இறக்கத்தை சந்தித்து பின்னர் மீண்டு நாளின் இறுதியில் 50 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளில் 13 ஏற்றத்துடனும், 4 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி ஸ்மால்கேப்50’ குறியீடு அதிகபட்சமாக 1.29 சதவீத ஏற்றத்துடனும், ‘நிப்டி ஸ்மால்கேப்100’ குறியீடு அதிகபட்சமாக 0.19 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறைசார் குறியீடுகளில் 12 குறியீடுகள் ஏற்றத்துடனும், 9 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்’ குறியீடு அதிகபட்சமாக 1.62 சதவீத ஏற்றத்துடனும், ‘நிப்டி ஆயில் & கேஸ்’ குறியீடு அதிகபட்சமாக 2.27 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,678 நிறுவனங்களின் பங்குகளில் 1,931 ஏற்றத்துடனும், 1,627 இறக்கத்துடனும், 120 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்தன. டெக்னிக்கலாக குறுகிய கால மீட்சிக்கான வாய்ப்புகள் இருந்தாலும், ஒட்டுமொத்த டெக்னிக்கல் அமைப்பு இன்னும் நியூட்ரல் முதல் பியரிஷ் என்ற நிலையிலேயே உள்ளது. நிப்டி 20 நாள் சராசரியான (எஸ்.எம்.ஏ.,) 22,674க்கு சற்று மேலே நிறைவடைந்துள்ள அதேநேரம் 9 மற்றும் 21 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது. எம்.ஏ.சி.டி., –133.84 என்ற அளவில் இருக்கும் சூழலில் பாசிட்டிவ் டைவர்ஜன்ஸுடன் (43.78) இருப்பது இறக்கத்திற்கான மொமென்டம் குறைந்திருப்பதையே காட்டுகின்றது. ஆர்.ஓ.சி., 0.79 என்ற அளவிலும், ஸ்டொக்காஸ்ட்டிக் %டி 56.43 மற்றும் %கே 71.40 என்ற அளவிலும் இருப்பது குறுகிய கால மொமென்டம் ஏற்றத்துக்கு சாதகமாக மேம்பட்டு வருவதை காட்டுகிறது.
ஆர்.எஸ்.ஐ., 50க்கு கீழே 44.90 என்ற அளவில் இருக்கிறது. இருப்பினும் +டி.ஐ.,யை விட –டி.ஐ., அதிகமாக இருப்பது இறக்கத்துக்கான அழுத்தம் அதிகமாக இருப்பதை காட்டுகிறது. ஏ.டி.எக்ஸ்., 35.73ல் இருப்பது, இறக்கப்போக்கில் குறிப்பிடத்தக்க வலிமை இருப்பதை காட்டுகிறது. இந்த முரண்பட்ட சூழலில், நிப்டி 22,824க்கு மேலே சென்று நிலைபெற்றால் மட்டுமே மீட்சி தொடர வாய்ப்புள்ளது. 22,498க்கு கீழே சென்றால் பலவீனம் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.
ஆதரவு 22538 22378 22271
தடுப்பு 22819 22939 23046
இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்
நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 28.10.26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
அசோக் லேலண்டு (எம்.ஏ.சி.டி.,(12,26) :–4.60 ஆர்.ஓ.சி., :–0.14 ஆர்.எஸ்.ஐ., :38.93) 144.85 142 138 146 1, 4
எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :–20.05 ஆர்.ஓ.சி., :–10.28 ஆர்.எஸ்.ஐ., :33.31) 353.60 350 342 363 1, 2, 4, 5
குஜராத் இண்டஸ்ட்ரீஸ் பவர் கம்பெனி (எம்.ஏ.சி.டி.,(12,26) :–6.42 ஆர்.ஓ.சி., :–2.38 ஆர்.எஸ்.ஐ., :41.09) 163.60 161 157 167 2, 5
கோத்ரேஜ் ப்ராபர்டீஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :–49.16 ஆர்.ஓ.சி., :2.39 ஆர்.எஸ்.ஐ., :44.10) 1,587 1,566 1,546 1,604 2, 5
வோல்டாஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :–40.49 ஆர்.ஓ.சி., :–2.11 ஆர்.எஸ்.ஐ., :42.88) 1,011.90 987 960 1044 3, 4
டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
(1) 5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (2) 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு
(3) நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு (4) 5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு
(5) 10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு (6) 5 நாளில் விலை ஏற்றம்
அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு https://www.skarthikeyan.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
