மலிவு விலையில் கிடைக்கும் கடன் பத்திரங்கள்: ‘கோல்டுமேன் சாக்ஸ்’ அறிக்கை

UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 10:24 PM

சர்வதேச பங்குச்சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், கடன் பத்திர சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு 2026ம் ஆண்டின் இறுதி வரை புதிய மற்றும் லாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் எனவும், குறிப்பாக, ஏ.ஐ., சார்ந்த நிறுவனங்களின் கடன்கள் மற்றும் நகராட்சி பாண்டுகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளதாகவும் ‘கோல்மேன் சாக்ஸ்’ தரகு நிறுவனத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:
முக்கிய வாய்ப்புகள்
1 ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சிக்காக நிறுவனங்கள் அதிகளவில் கடன் பெற்று வரும் நிலையில், தற்போதைய சந்தை மாற்றங்களால் நல்ல லாப வாய்ப்பும், உறுதியான அடிப்படைகளும் கொண்ட உயர்தர ஏ.ஐ., கடன் பத்திரங்களை ஈர்க்கக்கூடிய விலையில் வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்
2 கடந்த சில மாதங்களாக நகராட்சி பாண்டுகளின் வினியோகம் அதிகரித்துள்ளதால், முதலீட்டாளர்கள் மிக உயர்ந்த தர குறியீடு கொண்ட பத்திரங்களை அதிக லாபத்தில் வாங்க முடிகிறது. குறிப்பாக, பாண்டுகளின் வருவாய் 10 சதவீதம் வரை நெருங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
3 தற்போதைய பத்திர சந்தையில் நிலையற்ற தன்மை குறைவாகவே உள்ளது. இது முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு போர்ட்போலியோவை எதிர்கால சரிவுகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி தருகிறது.
சர்வதேச பங்குச்சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், கடன் பத்திர சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு 2026ம் ஆண்டின் இறுதி வரை புதிய மற்றும் லாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் எனவும், குறிப்பாக, ஏ.ஐ., சார்ந்த நிறுவனங்களின் கடன்கள் மற்றும் நகராட்சி பாண்டுகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளதாகவும் ‘கோல்டுமேன் சாக்ஸ்’ தரகு நிறுவனத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் மேலும் கூறியிருப்பதாவது: