'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' புத்தாண்டு தள்ளுபடி அறிவிப்பு
'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' புத்தாண்டு தள்ளுபடி அறிவிப்பு
ADDED : டிச 30, 2025 02:11 AM

'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான நிறுவனம், வரும் புத்தாண்டையொட்டி, 'பேடே சேல்' என்ற பயணி யருக்கான விமான சேவை கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இதன்படி நேற்று முதல், ஜன., 1 நள்ளிரவு 23:59 மணி வரை, ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் முன்பதிவு செய்யும் பயணியருக்கு, கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்.
உள்நாட்டு விமான பயண கட்டணம் 1,950 ரூபாயிலும், சர்வதேச விமான பயண கட்டணம் 5,355 ரூபாயிலும் துவங்குகிறது.
இந்த சலுகையை, உள்நாட்டு பயணியர் ஜன., 12 முதல், அக்., 10 வரை; சர்வதேச பயணியர் அக்., 31ம் தேதி வரை, எந்த தேதிகளில் வேண்டுமானாலும் பயன்படுத்தி, சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பயணிக்கலாம்.
பயணியர், இந்த தள்ளுபடி கட்டண விமான டிக்கெட்டுகளை, www.airindiaexpress.com என்ற இணையதளம், 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் ஆப்' மற்றும் அனைத்து முக்கிய முன்பதிவு மையங்களிலும், வரும் 1ம் தேதி நள்ளிரவு வரை முன்ப திவு செய்து கொள்ளலாம்.
இந்த சலுகை கட்டண டிக்கெட்டுகள் சென்னை, டில்லி, மும்பை உட்பட நாடு முழுதும் உள்ள அனைத்து விமான நிலையங்களில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அனைத்து விமானங்களுக்கும் பொருந்தும்.
இந்த தள்ளுபடி, 'ஏர் இந்தியா' விமானத்திற்கு பொருந்தாது எனவும் அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

