ADDED : டிச 30, 2025 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ .டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க், தனது பிரீமியம் மெட்டல் கிரெடிட் கார்டு வரிசையில் 'கஜ்' என்ற புதிய கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
இந்த கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக்கு 12,500 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி.,யும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் ஓராண்டில் இந்த கார்டு வாயிலாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தால், அடுத்த ஆண்டு கட்டணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வங்கி 'கிளாசிக், வெல்த், செலக்ட்' ஆகிய கிரெடிட் கார்டுகளில் ரிவார்டு பாயிண்டுகள் 25 சதவீதம் குறைப்பு, அஸ்வா, மயூரா கிரெடிட் கார்டுகள் வாயிலாக வெளிநாடுகளில் செலவு செய்வதற்கான ரிவார்டு பாயிண்டுகள் குறைப்பு, விமான நிலைய லவுஞ்சை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் போன்றவற்றை அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

