ADDED : டிச 29, 2025 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள டாப் 10 நிறுவனங்களில், 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 35,440 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக, பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., சந்தை மதிப்பு 12,692.10 கோடி ரூபாய் சரிந்து உள்ளது.
இதற்கு மாறாக, ஹெச்.டி.எப்.சி.,வங்கியின் சந்தை மதிப்பு 10,126.81 கோடி ரூபாயும், இன்போசிஸ் சந்தை மதிப்பு 6,626.62 கோடி ரூபாயும், பார்தி ஏர்டெல் சந்தை மதிப்பு 5,359.98 கோடி ரூபாயும் அதிகரித்துள்ளன.

