டெக்னிக்கல் அனாலிசிஸ் : ஏற்றம் வலுவாக இருந்தாலும் எச்சரிக்கை அவசியம்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : ஏற்றம் வலுவாக இருந்தாலும் எச்சரிக்கை அவசியம்
UPDATED : நவ 12, 2026 02:38 AM
ADDED : நவ 11, 2026 10:10 PM
நிப்டி 25,225ல் அனைத்து முக்கிய சராசரிகளுக்கும் மேலே நிறைவடைந்திருப்பது ஏற்றத்திற்கான சூழல் வலுவாக இருப்பதை காட்டுகின்றது. நிப்டியின் நகர்வு, மொமெண்டம் மற்றும் டைரக்ஷனல் இண்டிகேட்டர்கள் ஏற்றத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றன. இருப்பினும், மொமெண்டம் இண்டிகேட்டர்கள் 'ஓவர்பாட்' நிலையை அடைந்திருப்பதுடன், நிப்டியின் சமீபத்திய நகர்வுகள் ஏற்றத்திற்கான வேகம் சற்று குறைந்திருப்பதையும் காட்டுகின்றன.
ஒட்டுமொத்த டிரெண்டு பாசிட்டிவ்வாக இருந்தாலுமே அடுத்த கட்ட மேல் நோக்கிய நகர்வுக்கு முன்னால் சிறியதொரு புராபிட் புக்கிங்கோ அல்லது கன்சாலிடேஷனோ நடக்க வாய்ப்புள்ளது. 25,425க்கு மேலே நிறைவடைந்தால் ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 25,092, 24,929 மற்றும் 24,804ல் சப்போர்ட்டும், 25,421, 25,587 மற்றும் 25,713ல் ரெசிஸ்டென்ஸும் உள்ளது. மொத்தத்தில், ஓவர்பாட் நிலை இருந்தாலும் நிப்டியின் டிரெண்டு புல்லிஷாகவே இருக்கின்றது.
இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்
நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 11-11-26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
சி.ஜி., பவர் அண்டு இண்டஸ்ட்ரீயல் சொல்யூஷன்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26):-15.79 ஆர்.ஓ.சி.,:-1.28 ஆர்.எஸ்.ஐ.,:48.37) 822.60 817 812 833 இல்லை
சிட்டி யூனியன் பேங்க் (எம்.ஏ.சி.டி.,(12,26):-0.67 ஆர்.ஓ.சி.,:10.95 ஆர்.எஸ்.ஐ.,:57.43) 230.75 229 225 235 2, 5, 6
குஜராத் ஸ்டேட் பெர்டிலைசர்ஸ் & கெமிக்கல்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26):-1.65 ஆர்.ஓ.சி.,:8.50 ஆர்.எஸ்.ஐ.,:56.93) 147.00 143 136 153 6
ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26):-6.79 ஆர்.ஓ.சி.,:4.21 ஆர்.எஸ்.ஐ.,:54.24) | 719.50 | 710 | 701 | 728 | இல்லை
பி.சி.பி.எல்., கெமிக்கல் (எம்.ஏ.சி.டி.,(12,26):-9.26 ஆர்.ஓ.சி.,:1.85 ஆர்.எஸ்.ஐ.,:39.98) | 281.20 | 278 | 274 | 284 | இல்லை
