தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/கேளுங்கள்: டேர்ம் இன்சூரன்ஸில் இழப்பீடு ரூ.1 கோடி உண்மையில் வழங்கப்படுமா?

கேளுங்கள்: டேர்ம் இன்சூரன்ஸில் இழப்பீடு ரூ.1 கோடி உண்மையில் வழங்கப்படுமா?

கேளுங்கள்: டேர்ம் இன்சூரன்ஸில் இழப்பீடு ரூ.1 கோடி உண்மையில் வழங்கப்படுமா?

1


UPDATED : ஜூன் 01, 2026 03:20 AM

ADDED : ஜூன் 01, 2026 03:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2026 03:20 AM ADDED : ஜூன் 01, 2026 03:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டேர்ம் இன்சூரன்ஸில் இறப்பின்போது, ஒரு கோடி ரூபாய், 2 கோடி ரூபாய் கிடைக்கும் என்றெல்லாம் கூறுகிறார்களே! இது உண்மையா?



இதில் எல்.ஐ.சி., மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கிளைம் ரிசல்ட் எவ்வாறு உள்ளது?



தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது மிகவும் ஐயமாக உள்ளதே. இதற்கு விளக்கம் தாருங்கள்.



- கதிர்வேல் தொண்டாமுத்துார், கோவை

'டேர்ம் இன்சூரன்ஸ்' பாலிசி என்பது மிகவும் எளிமையான, நேரடியாக புரிந்துகொள்ளக்கூடிய ஆயுள் காப்பீட்டு திட்டம். குறைந்த செலவில் பெறக்கூடிய காப்பீட்டு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

Image 1582770


இந்த பாலிசி, குறிப்பிட்ட காலத்திற்கு (உதாரணமாக 30 ஆண்டுகள்) மற்றும் குறிப்பிட்ட காப்பீட்டு தொகைக்கு (உதாரணமாக ரூ.1 கோடி) மரண அபாயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. இந்த காலமே 'டேர்ம்' எனப்படுகிறது.

பாலிசி காலக்கெடுவிற்குள் காப்பீடு செய்யப்பட்ட நபர் மரணமடைந்தால், நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டு தொகை நியமிக்கப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.

இதில், கூடுதல் தொகை அல்லது போனஸ் போன்றவை வழங்கப்படமாட்டாது. பாலிசி காலம் முடியும் வரை நபர் உயிருடன் இருந்தால், காப்பீடு முடிவடையும்; எந்த தொகையும் வழங்கப்படாது.

அவரவர் குடும்பத்தினரின் எதிர்கால தேவைக்கென நீங்கள் விரும்பும் அளவிற்கு காப்பீட்டு தொகையை தேர்வு செய்யலாம். ஆனால், அதிகபட்சமாக வழங்கக்கூடிய தொகைக்கு காப்பீட்டு நிறுவனம் சில அளவு கோல்களை வைத்திருக்கும்.

அவை உங்கள் தற்போதைய வருமானம், எதிர்கால வருமானம் மற்றும் பிரீமியம் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருக்கும்.

இந்த பாலிசியில், மரண கோரிக்கை வழங்கப்பட வேண்டுமெனில், ஒவ்வொரு தவணை கட்டணமும் உரிய காலத்திற்குள் செலுத்தப்பட வேண்டும். தவறினால் பாலிசி செல்லுபடியாகாது, அதாவது 'லேப்ஸ்' ஆகிவிடும். இது 'பெயிட்-அப்' ஆக மாறாது; மீண்டும் உயிர்ப்பிக்கவும் முடியாது.

மேலும், இந்த பாலிசியில் கடன் வசதி மற்றும் 'சரண்டர் வசதி' போன்றவை கிடையாது. எளிமையான, கூடுதல் அம்சங்கள் இல்லாத திட்டமாக இருப்பதால், சிக்கனமானதாக இருக்கும்.

நீங்கள் கேட்டிருக்கும் மற்றொரு கேள்வி: “எல்.ஐ.சி., மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கிளைம் செட்டில்மென்ட் நிலை எப்படி உள்ளது?” என்பதாகும்.

ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயல்திறனை மதிப்பிடுவதில், கிளைம்களை எவ்வளவு விரைவாகவும் சரியாகவும் தீர்வு செய்கிறது என்பது மிகவும் முக்கியமான அளவுகோல்.

இதற்கான புள்ளிவிபரங்கள் பல நிறுவனங்களின் இணையதளங்களிலும், விளம்பரங்களிலும், மேலும் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., இணையதளத்திலும் கிடைக்கின்றன.

இதில், குறிப்பாக 'கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ' என்பதை கவனிக்க வேண்டும். ஒரு நிறுவனம் பெற்ற கிளைம்களில் எத்தனை சதவீதத்தை செட்டில் செய்துள்ளது என்பதை இது காட்டும்.

அதோடு, எத்தனை கிளைம்கள் எவ்வளவு காலமாக நிலுவையில் உள்ளன என்பதையும் பார்க்கலாம். இதன்வாயிலாக, கிளைம்களை நிறுவனம் எவ்வளவு விரைவாக கையாளுகிறது என்பதை அறிய முடியும்.

'கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரிப்பதே மெய்' என்பார்கள் அல்லவா? அதுபோல, உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் விசாரித்து, எந்த நிறுவனம் கிளைம் செட்டில்மென்ட் செய்வதில் நன்றாக செயல்படுகிறது, நல்ல பெயர் பெற்றுள்ளது என்பதையும் அறிந்து கொண்டு இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

“தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது இன்னும் ஐயம் இருக்கிறது. இதற்கு என்ன விளக்கம்?” என்று கேட்டிருக்கிறீர்கள்.

இந்தியாவில் செயல்படும் அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் - அவை அரசு நிறுவனங்களாக இருந்தாலும், தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் - ஒரே சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் கீழ் இயங்குகின்றன.

இந்நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது மற்றும் அவற்றை கண்காணிப்பது அனைத்தையும் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., மேற்கொள்கிறது.

பாலிசிதாரர்களின் நிதி பாதுகாப்பு, பாலிசிகள், சேவை, நிறுவனங்களின் செயல்முறை ஆகியவற்றிற்கு விரிவான விதிமுறைகள் உள்ளன. விதிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

மேலும், வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு தீர்வு காண பல்வேறு குறைதீர் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.

எனவே, அரசு நிறுவனம் என்பதற்காக மட்டும் பாதுகாப்பு அதிகம், தனியார் நிறுவனம் என்பதற்காக மட்டும் ஆபத்து அதிகம் என்று பொதுவாக நினைப்பது சரியாக இருக்காது.

க.நித்யகல்யாணி

காப்பீடு குறித்த நிபுணத்துவ எழுத்தாளர், பெருநிறுவன வரலாற்றாசிரியர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us