வங்கி நாமினி பிரச்னை தீர்கிறது நவ., 1 முதல் 4 பேரை நியமிக்கலாம்
வங்கி நாமினி பிரச்னை தீர்கிறது நவ., 1 முதல் 4 பேரை நியமிக்கலாம்
UPDATED : அக் 24, 2025 02:49 AM
ADDED : அக் 24, 2025 02:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வங்கி வாடிக்கையாளர்கள், வரும் நவ., 1 முதல், தங்கள் கணக்கிற்கு, நான்கு பேர் வரை நாமினிதாரர்களாக நியமிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
![]() |
இதன்படி, வாடிக்கையாளர்கள் நான்கு பேர் வரை நாமினிதாரர்களை, ஒரே நேரத்திலோ அல்லது வரிசைப்படியோ தேர்வு செய்து கொள்ளலாம். இதனால், வைப்பு கணக்குதாரர்கள், அவர்களின் நாமினிதாரர்களுக்கு கிளைம் செட்டில்மென்ட் எளிமையாக கிடைக்கும்.
ஆவணங்கள் மற்றும் லாக்கர்களைப் பொறுத்தவரை, ஒரே நேரத்தில் நாமினிதாரர்களை நியமிக்கும் போது, ஒவ்வொரு நாமினிதாரருக்கும் எத்தனை சதவீத பங்கு என்பதை குறிப்பிட வேண்டும் அல்லது அடுத்தடுத்து வரிசையாக நாமினிதாரர்களை தேர்வு செய்யலாம்.
![]() |


