உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 03, 2026 01:37 AM

அ நிறம் | அளவு
நிதி சேவை மற்றும் யு.பி.ஐ., கட்டண நிறுவனமான பாரத் பே, 'எஸ் பேங்க்' உடன் இணைந்து 'பாரத் பே பிளக்ஸ்' என்ற புதிய 'கிரெடிட் ஆன் யு.பி.ஐ.,' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்வாயிலாக, பாரத் பே செயலியின் பயனர்கள், தங்கள் கணக்கில் போதிய பண இருப்பு இல்லாத நிலையிலும் யு.பி.ஐ.,யில் பணம் செலுத்திவிட்டு, அடுத்த 45 நாட்கள் வரை வட்டி ஏதுமின்றி அந்த தொகையை திரும்ப செலுத்தலாம்.
கடைகளில் உள்ள கியூ.ஆர்., கோடு ஸ்கேன், ஆன்லைன் பரிவர்த்தனைகள், மின்சார பில், மொபைல் ரீசார்ஜ், பயண முன்பதிவு மற்றும் எரிபொருள் போன்ற அனைத்து அன்றாட செலவுகளுக்கும் இந்த கிரெடிட் லைன் வசதியை பயன்படுத்தலாம்.
பில்லிங் காலத்திற்குள் முழு தொகையையும் செலுத்தலாம் அல்லது தங்களின் வசதிக்கேற்ப இ.எம்.ஐ., முறையிலும் மாற்றி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
