sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி பெரிய மாற்றமின்றி செயல்படுவதற்கு வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி பெரிய மாற்றமின்றி செயல்படுவதற்கு வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி பெரிய மாற்றமின்றி செயல்படுவதற்கு வாய்ப்பு


UPDATED : ஜூன் 03, 2026 01:54 AM

ADDED : ஜூன் 03, 2026 01:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2026 01:54 AM ADDED : ஜூன் 03, 2026 01:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 153 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, நாளின் இறுதியில் 100 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.





இவற்றில் 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு குறைந்தபட்சமாக 0.05 சதவீதம் அதிகரித்தும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.09 சதவீதம் உயர்ந்தும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 4.23 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி பைனான்சியல் சர்வீசஸ் எக்ஸ் - பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.92 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,426 நிறுவனங்களின் பங்குகளில் 2,032 உயர்வுடனும்; 1,285 சரிவுடனும்; 109 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

குறுகியகால சராசரிகளுக்கு கீழே நிப்டி நிறைவடைந்த போதும் வர்த்தக நாளில் நல்லதொரு மீட்சிதனை கண்டிருப்பதால் நிப்டி ஒரு நிலைத்தன்மையை கண்டிருக்கின்றது என்று கொள்ளலாம். நிப்டி டெக்னிக்கலாக 23,400 மற்றும் 23,200ல் ஸ்திரமானதொரு சப்போர்ட்டையும், 23,660 மற்றும் 23,740ல் வலுவான ரெசிஸ்டென்ஸையும் தற்போது கொண்டுள்ளது.

Image 1583481


மொமென்டம் இண்டிகேட்டர்கள் குழப்பமான சூழலையே காட்டுவதாய் இருக்கின்றன. பெரிய தாக்கத்தை உருவாக்கக்கூடிய அளவிலான செய்திகள் இல்லாவிட்டால் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமலோ அல்லது சிறிய ஏற்றத்துடனோ நிப்டி செயல்படுவதற்கான வாய்ப்பே தற்போதைக்கு தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us