ADDED : அக் 11, 2025 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'பார்தி டெலிகாம்' 15,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டுவதற்கு, அடுத்த வாரம் கடன் பத்திரங்கள் வெளியீடுக்கு வர உள்ளன. ஏற்கனவே பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காக மூலதனத்தை திரட்டுகிறது.
இதற்காக, கடந்த ஆண்டை போலவே, நடப்பு நிதியாண்டில் குறைந்த வட்டியில் முதலீட்டை திரட்ட, இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டு மற்றும் இரண்டு மாதங்களில் முதிர்வடையும் பத்திரங்களை வெளியிட உள்ளது. இதற்கு முறையே 7.35, 7.45 சதவீதம் ஆண்டு வட்டியாக நிர்ணயித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.