ADDED : நவ 19, 2025 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கி ரிப்டோ கரன்சியான பிட்காய்ன், கடந்த ஏழு மாதங்களில் முதல் முறையாக 90,000 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. இது முதலீட்டாளர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில், பிட்காய்ன் விலை, இதுவரை இல்லாத அளவாக 1,26,000 டாலர்கள் என உச்சம் தொட்டது. அதன் பிறகு விலை சரிந்து வருகிறது.
அமெரிக்க பெடரல் வங்கி கடன் வட்டி விகிதங்களை குறைப்பதற்கான வாய்ப்பு, 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக கணிக்கப்படும் தகவல்களால், ரிஸ்க் எடுக்கும் மனப்பான்மை, முதலீட்டாளர்களிடம் குறைந்துள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

