உள்ளடக்கத்திற்கு செல்ல
‘அர்பன்’ களமிறங்குவதால் புளூ ஸ்டார், வோல்டாஸ் சரிவு
‘அர்பன்’ களமிறங்குவதால் புளூ ஸ்டார், வோல்டாஸ் சரிவு
UPDATED : நவ 28, 2026 12:00 AM
ADDED : நவ 27, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சேவைகள் துறையில் உள்ள ‘அர்பன் கம்பெனி’, வீடுகளுக்கான ‘ஏர்–கண்டிஷனர்’ விற்பனை பிரிவில் கால்பதித்துள்ளதை தொடர்ந்து, பாரம்பரிய ஏ.சி., நிறுவனங்களான ‘புளூ ஸ்டார், வோல்டாஸ்’ ஆகியவற்றின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 3.50 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.
‘புளூ ஸ்டார்’ பங்கு விலை, வர்த்தக நேர முடிவில் 3.30 சதவீதம் சரிந்து 1,722 ரூபாயில் நிலைகொண்டது. வோல்டாஸ் பங்கு விலை, ஆரம்ப வர்த்தகத்தில் அதிக சரிவை சந்தித்த போதிலும், பிற்பகலில் சற்று மீண்டு 1.60 சதவீதம் சரிவுடன் 1,197 ரூபாயில் முடிவடைந்தது.
ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ‘அர்பன் கம்பெனி’ பங்கு விலை, இறுதியில் 0.40 சதவீதம் உயர்ந்து 171 ரூபாயில் நிலைகொண்டது.
