உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 28, 2026 12:00 AM
ADDED : நவ 27, 2026 10:54 PM

அ நிறம் | அளவு
ப ெ ரிய நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் சிறுபான்மை பங்குதாரர்களின் நலன் பாதிக்கப்பட கூடாது என்பதில் செபி உறுதியாக இருப்பதாக அதன் தலைவர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
நிறுவன நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதில் ‘ப்ராக்ஸி ஆலோசனை நிறுவனங்களின்’ பங்கை செபி முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘டாடா ஸ்டீல் – ஏ.பி.எல். அப்பல்லோ’ ஒப்பந்தத்தின் கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய தரப்பு பரிவர்த்தனை விதிகள் குறித்து செபி ஆய்வு செய்து வருகிறது. இந்த விவகாரத்தில் பொது விவாதங்களும், ஊடகங்களின் ஆய்வும் வரவேற்கத்தக்கவை என்றும், முதலீட்டாளர் பாதுகாப்பே செபியின் தலையாய முன்னுரிமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
