தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/தீபாவளிக்கு முன் தங்கம் வாங்கலாமா?

தீபாவளிக்கு முன் தங்கம் வாங்கலாமா?

தீபாவளிக்கு முன் தங்கம் வாங்கலாமா?


UPDATED : அக் 08, 2026 12:00 AM

ADDED : அக் 07, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 12:00 AM ADDED : அக் 07, 2026 10:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கம் விலை, ஜனவரி மாத உச்சத்திலிருந்து 26 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ள நிலையில், தீபாவளிக்கு முன் வாங்குவது லாபகரமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விலை குறைந்திருப்பது வாங்குவதற்கு ஓரளவு சாதகமாக இருந்தாலும், மேலும் சரிவதற்கான வாய்ப்பையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு, டாலர் வலுப்பெறுதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரிந்துள்ளதாக ‘கோட்டக் செக்யூரிட்டீஸ்’ நிறுவனத்தின் கமாடிட்டி பிரிவை சேர்ந்த கய்னத் செயின்வாலா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மத்திய வங்கிகளின் தங்கம் வாங்கும் போக்கு, புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் உள்ளிட்ட காரணங்களால் நீண்டகாலத்தில் தங்கத்துக்கான ஆதரவு தொடர்கிறது என, ‘டாடா மியூச்சுவல் பண்டு’ தெரிவித்துள்ளது.

எனவே, ஒரே நேரத்தில் அதிக தொகையை முதலீடு செய்வதற்கு பதிலாக, அடுத்த சில வாரங்களில் மூன்று அல்லது நான்கு தவணைகளாக வாங்கலாம் எனவும் நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

தங்கம் விலை 26% சரிவு


ஜனவரி மாத உச்ச விலை 5,595 டாலர் / அவுன்ஸ்
தற்போதைய சர்வதேச விலை 4,136 டாலர் / அவுன்ஸ்
விலை சரிவு 26%-க்கும் மேல்
முக்கிய ஆதரவு நிலை 3,950 டாலர் / அவுன்ஸ்
எம்.சி.எக்ஸ்., தங்கம் 1.50 லட்சம் ரூபாய்க்கு கீழ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us