sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 ஆர்.பி.ஐ., கடன் விதிகளால் மூலதன சந்தை பங்குகள் சரிவு

/

 ஆர்.பி.ஐ., கடன் விதிகளால் மூலதன சந்தை பங்குகள் சரிவு

 ஆர்.பி.ஐ., கடன் விதிகளால் மூலதன சந்தை பங்குகள் சரிவு

 ஆர்.பி.ஐ., கடன் விதிகளால் மூலதன சந்தை பங்குகள் சரிவு


ADDED : பிப் 17, 2026 12:15 AM

Google News

ADDED : பிப் 17, 2026 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப ங்குச் சந்தை தரகு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் இருந்த தளர்வுகளை நீக்கி, புதிய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, கடந்த 13ம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று பங்குச் சந்தையின் வர்த்தக துவக்கத்திலேயே தரகு நிறுவனங்களான 'பி.எஸ்.இ., ஏஞ்சல் ஒன், குரோ' பங்குகளின் விலை 2 சதவீதம் முதல் 10 சதவீதம்வரை சரிந்து வர்த்தகமாகின.

வர்த்தக முடிவில், பி.எஸ்.இ., நிறுவனத்தின் பங்கு விலை 7.45 சதவீதம் சரிந்து, 2,800 ரூபாய்க்கு முடிந்தது. அதேபோல, குரோ, ஏஞ்செல் ஒன் நிறுவனப் பங்கு விலைகள் முறையே 1.69 சதவீதம் மற்றும் 5.13 சதவீதம் சரிந்து 170 ரூபாய் மற்றும் 2,560 ரூபாய்க்கு முடிந்தன.

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி, இனி தரகு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும்போது, அந்தப் பணத்துக்கு இணையான 100 சதவீதம் பிணையை கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக, தரகு நிறுவனங்கள் தங்களின் சொந்த வர்த்தகத்திற்காக வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதற்கு இனி அனுமதி கிடையாது.






      Dinamalar
      Follow us