போலி டிஜி லாக்கர் செயலிகள் மத்திய அரசு எச்சரிக்கை
போலி டிஜி லாக்கர் செயலிகள் மத்திய அரசு எச்சரிக்கை
ADDED : டிச 07, 2025 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூகுள் பிளே ஸ்டோரில் போலியான டிஜிட்டல் லாக்கர் செயலிகள் உலா வருவதாகவும், பொதுமக்கள் இதை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. 'நேஷனல் இ - கவர்னன்ஸ் டிவிஷன், இந்திய அரசு' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள செயலி மட்டுமே உண்மையான டிஜிலாக்கர் செயலி என்றும், பதிவிறக்கம் செய்யும் முன், செயலியை உருவாக்கியவர் பெயரை அவசியம் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலி செயலிகளை பயன்படுத்தினால் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும், இவ்வாறு சிலர் ஏமாந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. டிஜிலாக்கரை 'digilocker.gov.in' என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

