தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/'வளர்ந்த நாடாக நாம் மாற பென்ஷன் பண்டுகள் உதவும்': தலைமை பொருளாதார ஆலோசகர்

'வளர்ந்த நாடாக நாம் மாற பென்ஷன் பண்டுகள் உதவும்': தலைமை பொருளாதார ஆலோசகர்

'வளர்ந்த நாடாக நாம் மாற பென்ஷன் பண்டுகள் உதவும்': தலைமை பொருளாதார ஆலோசகர்


UPDATED : ஜூலை 01, 2026 05:04 PM

ADDED : ஜூலை 01, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 05:04 PM ADDED : ஜூலை 01, 2026 03:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'விக்சித் பாரத்' திட்டத்திற்கு பென்ஷன் பண்டுகள் பெருமளவில் பங்களிக்க முடியும் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

'பி.எப்.ஆர்.டி.ஏ.,' நடத்திய நிகழ்வில் அவர் பங்கேற்று தெரிவித்ததாவது:

நீண்டகால மூலதனமான பென்ஷன் சேமிப்புகள், உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும், இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் பயணத்திற்கும் ஆதரவளிக்கும்.

ஆழமான, சிறப்பாக நிர்வகிக்கப்படும் பென்ஷன் கட்டமைப்பை இந்தியா உருவாக்க முடியும். இதனால் பென்ஷன் தேவைகளை சந்திப்பதுடன், பொருளாதாரத்திற்கான நீண்டகால முதலீடுகளையும் மேற்கொள்ளலாம்.



ஒரு வலுவான பென்ஷன் அமைப்பு விக்சித் பாரத் பயணத்திற்கு பங்களிக்கும். பல பென்ஷன் பண்டுகள் ரிஸ்க்கான சொத்துகளில் முதலீடு செய்கின்றன. அதற்கு தங்கம் ஒரு நல்ல உதாரணம். தங்கத்தில் மிகையாக முதலீடு செய்வதால் இந்திய பொருளாதாரத்திற்கு பரந்துபட்ட பாதிப்புகள் ஏற்படும்.

சந்தையில் குறுகிய கால முதலீடு பரவுகிறது. பென்ஷன் வாக்குறுதிகளை மறந்து அதிக லாபத்தை துரத்தக்கூடாது. அதிக ரிஸ்க் எடுக்காமல், மூலதனத்தை பாதுகாத்து, நீண்டகால தேவைகளை சந்திப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் நிதி பாதுகாப்பே வளர்ந்த சமூகத்தின் அடையாளம்.

இவ்வாறு தெரிவித்தார்.

என்.பி.எஸ்., ஸ்வஸ்த்யா பென்ஷன் திட்டம்
அடுத்த 60 -70 நாட்களில் 'என்.பி.எஸ்., ஸ்வஸ்த்யா' பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று 'பி. எப்.ஆர்.டி.ஏ,.' தலைவர் எஸ்.ராமன் தெரிவித்துள்ளார். இது மருத்துவ காப்பீடும், பென்ஷனும் கலந்த திட்டமாக இருக்கும். இதற்காக பென்ஷன் பண்டுகளுடன் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூட்டணி அமைப் பார்கள். என்.பி.எஸ்., பயனா ளிகளுக்கு டாப் - அப் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். அனைத்து என்.பி.எஸ்., பயனாளிகளும் இதில் பங்கேற்கலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us