டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டியில் கன்சாலிடேஷன் தொடர வாய்ப்புள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டியில் கன்சாலிடேஷன் தொடர வாய்ப்புள்ளது
UPDATED : ஜூலை 01, 2026 03:49 AM
ADDED : ஜூலை 01, 2026 03:40 AM

நேற்று 85 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி, வர்த்தகத்தின் இறுதியில் 80 புள்ளிகள் சரிந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 14 குறியீடுகள் உயர்ந்தும்; 4 குறைந்தும் காணப்பட்டன.
இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 1.06 சதவீதம் அதிகரித்தும், 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.24 சதவீதம் வீழ்ச்சியுடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும் முடிவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 1.45 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 2.73 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,411 நிறுவனங்களின் பங்குகளில் 1,919 உயர்ந்தும்; 1,383 சரிந்தும்; 109 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
நிப்டி கன்சாலிடேஷன் நிலைமையிலேயே தொடர்ந்து வருகிறது. 20, 21 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு மேலேயும், 14 மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழேயும் நிறைவடைந்திருப்பது இதை ஓரளவுக்கு உர்ஜிதம் செய்கிறது.
![]() |
எம்.ஏ.சி.டி., ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஆர்.ஓ.சி., சிறிய ஏற்றத்திற்கு ஆதரவாக இருக்கிற போதிலும் ஸ்டொக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் ஏற்றத்திற்கான வேகம் குறைவாக இருப்பதை காட்டுகிறது. உடனடி சப்போர்ட் 23,830 என்ற லெவலில் இருக்கிறது. 23,900 லெவலில் உடனடி ரெசிஸ்டென்ஸ் இருக்கின்றது.
நிப்டி 23,830க்கு கீழே சென்றால் 23,700 வரை சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. 23,900க்கு மேலே சென்றால் 24,050 வரை சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. உலகளாவிய சந்தைகள் மற்றும் முக்கிய பொருளாதார செய்திகள் நிப்டியின் நாளைய நகர்வில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

