தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/தாமிரம், அலுமினியம் விலை உயரக்கூடும் வலுவான நிலையில் அடிப்படை உலோக வர்த்தகம்: வலுவான நிலையில் அடிப்படை உலோக வர்த்தகம்

தாமிரம், அலுமினியம் விலை உயரக்கூடும் வலுவான நிலையில் அடிப்படை உலோக வர்த்தகம்: வலுவான நிலையில் அடிப்படை உலோக வர்த்தகம்

தாமிரம், அலுமினியம் விலை உயரக்கூடும் வலுவான நிலையில் அடிப்படை உலோக வர்த்தகம்: வலுவான நிலையில் அடிப்படை உலோக வர்த்தகம்


UPDATED : அக் 10, 2026 03:43 AM

ADDED : அக் 09, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 03:43 AM ADDED : அக் 09, 2026 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எரிசக்தி செலவு உயர்வு, வட்டி அதிகரிப்பு எதிர்பார்ப்பு, அரசுகளின் கடன் குறித்த கவலைகளால் உலகளவில் பத்திரங்கள் விற்பனை அதிகரித்து, கடன் செலவு உயர்ந்துள்ளது. போர்களால் சரக்கு போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது. இருப்பினும், குறைந்த கையிருப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த தேவை காரணமாக, அடிப்படை உலோகங்களின் விலை வலுவாக உள்ளது. இந்நிலையில், கமாடிட்டி வர்த்தகத்தில் தாமிரம், அலுமினியம், துத்தநாகம் மற்றும் கச்சா எண்ணெய் விலை எப்படி இருக்கும் என 'காம்ட்ரெண்ட்ஸ்' நிறுவன இயக்குநர் ஞானசேகரன் தெரிவித்ததாவது:

தாமிரம்

தேவை அதிகரிப்பு, வினியோக பற்றாக்குறை காரணமாக எம்.சி.எக்ஸ்., சந்தையில் விலை விரைவில் ஒரு கிலோ 1,500 ரூபாயை தாண்டக்கூடும்.

அலுமினியம்

மேற்காசியாவில் வினியோக தடைகள், சீனாவில் உற்பத்தி குறைவு ஆகியவற்றால் விலை உயர வாய்ப்புள்ளது. எம்.சி.எக்ஸ்., சந்தையில் ஒரு கிலோ அலுமினியம் 360 - 370 ரூபாய் வரை உயரலாம்.

துத்தநாகம்

மூலப்பொருள் செறிவூட்டலில் பற்றாக்குறை, உருக்காலைகளின் வினியோக நிலை ஆகியவை விலைக்கு ஆதரவாக உள்ளன. எனினும், தேவை பலவீனமாக இருப்பதால், எம்.சி.எக்ஸ்., சந்தையில் ஒரு கிலோ து த்தநாகம் விலை 410 - 455 வரம்பில் நீடிக்கலாம்.

Image 1628659

கச்சா எண்ணெய்

போர் பதற்றம் தணியக்கூடும் என்ற சமிக் ஞைகள் விலைக்கு ஆதரவாக இருந்தாலும் சவுதி - ஹவுதி மோதல், சில முக்கிய சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருப்பது வினியோக கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் மீண்டும் 8,950 - 9,000 ரூபாய் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us