உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 10, 2026 05:13 AM
ADDED : அக் 09, 2026 10:36 PM

அ நிறம் | அளவு
‘பியூஷன் சி.எக்ஸ்.,’
பங்கு விலை ரூ.275 – 289
ஏ .ஐ.,வாயிலாக வாடிக்கையாளர் சேவைகளை வழங்கி வரும் பியூஷன் சி.எக்ஸ்., நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வரும் அக்டோபர் 14ம் தேதி தொடங்கி 16ம் தேதி முடிவடைய இருக்கிறது.
ஒரு பங்குக்கான விலை வரம்பு 275 – 289 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ.,வில் 702 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது.
பங்கு வெளியீட்டில், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகளும், ஓ.எப்.எஸ்., முறையில் 202 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளும் வெளியாக இருக்கின்றன. கிடைக்கும் நிதியில் 275 கோடி ரூபாயை நிலுவையில் உள்ள கடன்களை அடைக்கவும், 61 கோடி ரூபாயை துணை நிறுவனங்களில் முதலீடு செய்யவும், மீதமுள்ள நிதியை நிறுவனத்தின் இதர தேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
