டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி டிரெண்டு ஏறுவதற்கு 22,947ஐ கடக்க வேண்டும்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி டிரெண்டு ஏறுவதற்கு 22,947ஐ கடக்க வேண்டும்
UPDATED : அக் 10, 2026 03:45 AM
ADDED : அக் 09, 2026 10:36 PM

நேற்று 83 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து ஏற்றம் கண்டு நாளின் இறுதியில் நிப்டி 288 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 0.27 சதவீத உயர்வுடனும், 'நிப்டிமிட்கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 1.56 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 20 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 1 குறியீடு இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 3.02 சதவீதம் அதிகரித்தும், 'நிப்டி பார்மா' குறியீடு குறைந்தபட்சமாக 0.54 சதவீதம் அதிகரித்தும் நிறைவடைந்தன. 'நிப்டி ஆயில் & கேஸ்' குறியீடு 0.09 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தது. என்.எஸ்.இ.,-யில் வர்த்தகம் நடந்த 3,684 நிறுவனங்களின் பங்குகளில் 2,182 ஏற்றத்துடனும்; 1,391 இறக்கத்துடனும்; 111 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்தன.
நாளின் இடையே நிப்டி கண்ட குறைந்தபட்ச அளவில் இருந்து மீண்டு கணிசமான ஏற்றத்துடன் நிறைவடைந்திருப்பது குறுகிய கால மொமென்டம் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது.
இருப்பினும், ஆர்.எஸ்.ஐ., 36.50 என்ற அளவில் இருப்பதும், எம்.ஏ.சி.டி., நெகட்டிவாக இருப்பதும் இன்னும் முழுமையாக பலவீனம் குறைந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது.

தற்போதைய டெக்னிக்கல் சூழ்நிலைப்படி, நிப்டி 22,665 மற்றும் 22,947 என்ற எல்லைகளை தாண்டி மேலே சென்றால் மட்டுமே இந்த பலவீன நிலை முழுமையாக மாற வாய்ப்புள்ளது எனலாம். 22,294-க்கு கீழே இறங்கினால் 22,200 வரை செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
