
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி விமான நிலைய ஓய்வறை சேவையை நாம் இலவசமாக பெறுகிறோம். ஆனால், இதற்கான கட்டணங்களை யார் செலுத்துகின்றனர்?
* இந்தியாவில் உள்ள உள்ளூர் ஓய்வறைகளுக்கு , ஒரு முறை உள்ளே செல்ல 600 முதல் 1,200 ரூபாய் வரை வங்கிகள் கட்டணமாக செலுத்துகின்றன
*வெளிநாட்டு ஓய்வறைகளுக்கு, ஒரு நுழைவுக்கான கட்டணம் 2,200 முதல் 3,080 ரூபாய் வரை இருக்கும்
*புதிய வாடிக்கையாளர் களை ஈர்க்கவும், ஏற் கனவே உள்ள வாடிக்கை யாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும் வங்கிகள் இந்த சலுகையை வழங்குகின்றன
*இந்த செலவுகள் பெரும்பாலும் அட்டையின் வருடாந்திர கட்டணம் அல்லது கடன் வட்டியின் ஒரு பகுதியாக ஈடு செய்யப்படுகின்றன.
யாருக்கு லாபம்?
பயணியர்: இலவச உணவு, வைபை, ஓய்வெடுக்க வசதி
ஓய்வறைகள்: வங்கி ஒப்பந்தங்களால் நிலையான வருமானம்
வங்கிகள்: வாடிக்கையாளர்கள் விசுவாசத்தை அதிகரிக்கின்றன.