நீண்டகால செல்வத்தை உருவாக்க பெண்களுக்கான 'கோடீஸ்வரி கான்கிளேவ் - 2026'
நீண்டகால செல்வத்தை உருவாக்க பெண்களுக்கான 'கோடீஸ்வரி கான்கிளேவ் - 2026'
ADDED : செப் 21, 2026 02:27 AM

பெண்கள் தங்களின் உண்மையான நிதி சுதந்திரத்தை உருவாக்கிக்கொள்ளவும், தங்களுக்கான எதிர்கால செல்வத்தை உருவாக்கிக்கொள்ளவும் உதவும் வகையில், 'கோடீஸ்வரி கான்கிளேவ் - 2026' சென்னையில் செப்டம்பர் 26ம் தேதி நடைபெற இருக்கிறது.
'உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடக்கும் இந்த நிகழ்வு, வழக்கமான கருத்தரங்கமாக இல்லாமல், கற்றல், அங்கீகாரம், வெளிப்படையான உரையாடல் மற்றும் பெண் முதலீட்டாளர்களின் சங்கமம் ஆகிய நான்கு துாண்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதில் சிறப்பு விருந்தினராக, பிரபல நடிகையும், இயக்குநருமான ரேவதி பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.
அவருடன் இணைந்து, பல்வேறு துறைகளில் நிதி சுதந்திரம் அடைந்த பெண் சாதனையாளர்களும் தங்களது நேரடி அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்வில், பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு மற்றும் நீண்டகால முதலீடு குறித்த உங்களின் கேள்விக்கான பதில்களை, நேரடியாக அத்துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்டு பெறலாம்.
தொடர்புக்கு
93848 02285 என்ற அலைபேசி எண்ணை அழைக்கவும்.
