உள்ளடக்கத்திற்கு செல்ல

டிஜிட்டல் தங்கம் வாங்குவது ஒரே ஆண்டில் 110% உயர்வு
டிஜிட்டல் தங்கம் வாங்குவது ஒரே ஆண்டில் 110% உயர்வு
ADDED : செப் 21, 2026 02:25 AM

அ நிறம் | அளவு
யு. பி.ஐ., செயலிகள் வாயிலாக 10 ரூபாய், 20 ரூபாய் என மிக குறைந்த தொகையில் 'டிஜிட்டல்' தங்கம் வாங்கும் நடைமுறை பெரும் வரவேற்பை பெற்று வருவதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் முதல் ஆக., வரையில் சராசரியாக மாதத்துக்கு 2,500 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் தங்கம் வாங்கப்பட்டுள்ளது என்றும், குறிப்பாக கடந்த ஆக., மாதத்தில் டிஜிட்டல் தங்கம் வாங்குவது முந்தைய ஆண்டை விட 110 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதேநேரம், செபி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தங்கம் இ.டி.எப்., திட்டங்களில் ஆக., மாதத்தில் மட்டும் 2,597 கோடி ரூபாய் புதிய முதலீடுகள் வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
