தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/கேளுங்கள்: மாற்றுத்திறனாளிக்கான 'ஜீவன் ஆதார்' பாலிசி செலுத்திய தொகை திரும்ப கிடைக்குமா?

கேளுங்கள்: மாற்றுத்திறனாளிக்கான 'ஜீவன் ஆதார்' பாலிசி செலுத்திய தொகை திரும்ப கிடைக்குமா?

கேளுங்கள்: மாற்றுத்திறனாளிக்கான 'ஜீவன் ஆதார்' பாலிசி செலுத்திய தொகை திரும்ப கிடைக்குமா?


UPDATED : செப் 21, 2026 02:45 AM

ADDED : செப் 21, 2026 02:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 02:45 AM ADDED : செப் 21, 2026 02:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனக்கும் (68 வயது), என் மனைவிக்கும் (60 வயது) ஒரே மருத்துவ காப்பீட்டு பாலிசி உள்ளது. இதில், ஒருவருடைய காப்பீட்டை மட்டும் வேறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மாற்ற முடியுமா?

- மின்னஞ்சல்

முடியும். ஒரே மருத்துவ காப்பீட்டு பாலிசியில் உள்ள இருவரில், ஒருவருடைய காப்பீட்டை மட்டும் வேறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். மற்றவர் ஏற்கனவே உள்ள நிறுவனத்திலேயே தொடர்ந்து காப்பீடு பெறலாம்.

இதற்கு போர்ட்டிங் என்று பெயர். பாலிசி புதுப்பிக்கப்படும் நேரத்தில் மட்டுமே போர்ட்டிங் செய்ய முடியும். பொதுவாக, புதுப்பிக்கும் தேதிக்கு குறைந்தது 45 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

போர்ட்டிங் விண்ணப்பம் என்பது, புதிய பாலிசி பெறுவதற்கான விண்ணப்பம் போன்று கருதப்படும். எனவே, புதிய நிறுவனம் மருத்துவப் பரிசோதனை கேட்கலாம். விண்ணப்பத்தை ஏற்கவோ, நிராகரிக்கவோ அந்த நிறுவனத்துக்கு உரிமை உள்ளது. பிரீமியமும் மாறுபடலாம்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டால், பழைய பாலிசியில் ஏற்கனவே நிறைவடைந்த காத்திருப்பு காலத்துக்கான பலன்கள் புதிய பாலிசியிலும் தொடரும். அதேபோல், தற்போதுள்ள பாலிசியில் நீங்கள் கிளெய்ம் செய்யாததற்காக பெற்ற போனஸ் காப்பீட்டு தொகையை, கூடுதல் பிரீமியம் செலுத்தி, புதிய பாலிசியின் காப்பீட்டு தொகையோடு சேர்த்துக் கொள்ளலாம்.

போர்ட்டிங் செய்யும்போது முன்கூட்டியே விண்ணப்பிப்பது முக்கியம். புதிய நிறுவனம் விண்ணப்பத்தை நிராகரித்தாலோ அல்லது புதிய பாலிசியின் பிரீமியம், நிபந்தனைகள் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லாவிட்டாலோ, பழைய பாலிசியை காலதாமதமின்றி புதுப்பிக்க போதுமான அவகாசம் இருக்க வேண்டும்.

மேலும், ஒரே காப்பீட்டு நிறுவனத்துக்குள்ளேயே ஒருவருடைய பாலிசியை வேறு பாலிசிக்கு மாற்றிக் கொள்ளலாம். இதற்கு மைக்ரேஷன் என்று பெயர். இதிலும், ஏற்கனவே கிடைத்துள்ள காப்பீட்டு பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.

என் மாற்றுத்திறனாளி மகனுக்காக, 20 ஆண்டுகளுக்கு முன், 'ஜீவன் ஆதார்' பாலிசி எடுத்தேன்; பிரீமியம் முழுவதையும் செலுத்திவிட்டேன். தற்போது இந்த பாலிசி நடைமுறையில் இல்லை. பாலிசியின் நோக்கம் நிறைவேறாத நிலையில், இதில் சேர்ந்துள்ள தொகையை வேறு பாலிசிக்கு மாற்றவோ அல்லது இப்போதே பெற்றுக்கொள்ளவோ முடியுமா? இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கருத்து என்ன?

- ராஜகோபால்,

கே.கே.நகர், சென்னை

எல்.ஐ.சி.,யின் ஜீவன் ஆதார் பாலிசி, மாற்றுத்திறனாளி சார்ந்தவர்களுக்கு நீண்டகால நிதி பாதுகாப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. பாலிசிதாரர் இறந்த பிறகு, அவரை சார்ந்திருக்கும் மாற்றுத்திறனாளிக்கு தொடர்ந்து நிதி கிடைப்பதே இதன் முக்கிய நோக்கம்.

இந்த திட்டத்தில் புதிய பாலிசிகள் வழங்குவது, 2014ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கு முன் எடுக்கப்பட்ட பாலிசிகள், அவற்றின் விதிமுறைகளின்படி தொடர்ந்து இருக்கும்.

பாலிசியின் நோக்கம் நீண்டகால நிதி பாதுகாப்பு என்பதால், பாலிசிதாரர் உயிருடன் இருக்கும்போதே தொகையை எடுத்துக்கொள்ள பொதுவாக அனுமதி இல்லை. இந்த பாலிசியை ரத்து செய்து தொகை பெறவும், அதன் அடிப்படையில் கடன் பெறவும் முடியாது.

இது தொடர்பான வழக்கில், 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், மாற்றுத்திறனாளி சார்ந்தவருக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் உயிருடன் இருக்கும்போதே, நிதி தேவைப்படக்கூடிய சூழ்நிலைகள் இருப்பதை சுட்டிக்காட்டியது. ஆனால், தற்போதைய விதிகளில் மாற்றம் செய்வது, பார்லிமென்டின் பரிசீலனைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தது.

பின்னர், 2022ம் ஆண்டு வருமான வரி சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றத்தின் வாயிலாக, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 60 வயதை எட்டியவர்கள் ஜீவன் ஆதார் திட்டத்தில் செலுத்துவதை நிறுத்தி, திரட்டப்பட்ட தொகையை மாற்றுத்திறனாளி சார்ந்தவரின் நலனுக்கு பயன் படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த மாற்றம், ஏற்கனவே உள்ள பழைய பாலிசிகளுக்கு பொருந்தாது என்று பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.

Image 1621442


எனவே, 20 ஆண்டுகளுக்கு முன் எடுத்த உங்கள் பாலிசியின் தொகையை இப்போது பெறவோ அல்லது வேறு பாலிசிக்கு மாற்றவோ, உச்ச நீதிமன்றம் பொதுவாக அனுமதி வழங்கியுள்ளது என்று கூற முடியாது. உங்கள் பாலிசியின் தொடக்க தேதி மற்றும் விதிமுறைகளை அடிப்படையாக கொண்டு, எல்.ஐ.சி.,யிடம் எழுத்துப்பூர்வமாக தற்போதைய நிலையை தெரிந்துகொள்வது. நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us