தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டான்போ இமேஜிங் இந்தியா லிமிடெட்

டான்போ இமேஜிங் இந்தியா லிமிடெட்

டான்போ இமேஜிங் இந்தியா லிமிடெட்


UPDATED : அக் 14, 2026 02:17 AM

ADDED : அக் 13, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 02:17 AM ADDED : அக் 13, 2026 10:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டான்போ இமேஜிங் இந்தியா' நிறுவனம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறைகளுக்கான 'எலக்ட்ரோ ஆப்டிக்' மற்றும் 'இன்ப்ராரெட்' தொழில்நுட்ப கருவிகளை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. வெப்ப படமெடுக்கும் கருவிகள், ஆயுதங்களில் பொருத்தப்படும் குறிவைப்பு கருவிகள், வெப்ப இமேஜிங் பைனாகுலர்கள், இலக்கு காட்டும் அமைப்புகள், ஏவுகணைகளை தேடும் கருவிகள், தீ கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ஏவுகணை வழிகாட்டி அமைப்புகள் என பல்வேறு இராணுவ பயன்பாட்டு தயாரிப்புகளை இந்நிறுவனம் தயாரிக்கிறது. இந்திய மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு படைகள், சட்ட அமலாக்க மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள், பாதுகாப்பு உபகரண உற்பத்தியாளர்கள் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். பெங்களூருவில் உள்ள இதன் ஆராய்ச்சி மையத்தில் 130 பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். பெருமளவிலான உற்பத்தியை ஒப்பந்த உற்பத்தியாளர்கள் வாயிலாக செயல்படுத்துகிறது. மேலும், இந்தியா உட்பட 24 நாடுகளில் இதன் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

சிறப்பம்சங்கள்

*எலக்ட்ரோ ஆப்டிக்/இன்ப்ராரெட் தொழில்நுட்பங்களுக்கான அறிவுசார் சொத்துரிமையை கொண்டுள்ளது

*அடிப்படை சென்சார்கள் முதல் தானியங்கி தளங்கள் வரை முழுமையான தயாரிப்புத் திறனை கொண்டுள்ளது

*நாட்டின் தெர்மல் இமேஜிங் ஏற்றுமதியில், 2024-2026 நிதியாண்டுகளில் எண்ணிக்கை அடிப்படையில் 94 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தது

* இதன் எலக்ட்ரோ ஆப்டிக்/இன்ப்ராரெட் தயாரிப்புகள் சர்வதேச ஆயுத பரிமாற்ற கட்டுப்பாட்டு விதிகளிலிருந்து விலக்கு பெற்றுள்ளதால், ஏற்றுமதி நடைமுறைகளை எளிதாக கையாள முடிகிறது

*பெரியளவிலான உற்பத்திக்கு வெளி நிறுவனங்களை பயன்படுத்துகிறது; முக்கிய தொழில்நுட்ப பணிகளை தானே மேற்கொள்கிறது

*24 நாடுகளில் 28,000க்கும் மேற்பட்ட ராணுவ செயல்பாட்டு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது.

இடர்கள்

*அரசுகளின் பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் நீண்டகாலம் எடுப்பதும், அவற்றின் கால அளவை கணிக்க முடியாததும்

*பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களை சார்ந்திருப்பதால், பெரிய வாடிக்கையாளர்கள் அல்லது சில முக்கிய ஆர்டர்களை சார்ந்திருக்கும் நிலை

*உலகளவில் குறைந்த அளவில் கிடைக்கும் ஒருசில மூலப்பொருட்களை சார்ந்திருப்பது

*வெளி நிறுவனங்களிடம் உற்பத்தி பணிகளை ஒப்படைப்பதால், உற்பத்தியில் தாமதம் ஏற்படக்கூடும்

*ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதங்கள், அபராதங்களுக்கு வழிவகுக்கலாம்

*உற்பத்தி முடிந்து வருவாய் கிடைக்க நீண்டகாலம் ஆவதால், பணப்புழக்கத்தில் நெருக்கடி ஏற்படுவதுடன், அன்றாட தொழில் செயல்பாடுகளுக்கு அதிகளவில் நடைமுறை மூலதனம் தேவைப்படுகிறது.

கவனம்:

முதலீடு செய்யும் முன் விலை மதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ளவேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்கவேண்டும் Image 1630428

ஐ.பி.ஓ., விபரங்கள்:
தொடங்கும் தேதி : 15.10.2026
முடியும் தேதி: 19.10.2026
பட்டியலிடப்படும் சந்தைகள்: என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ.,
பட்டியலிடப்படும் நாள்: 23.10.2026 (உத்தேசமாக)
திரட்டப்படும் தொகை : ரூ.852.18 கோடி வரை (அதிகபட்சம்)
ஆபர் பார் சேல்: ரூ.852.18 கோடி
முக மதிப்பு: ரூ.2
விலை வரம்பு: ரூ.665-700
விண்ணப்பிக்க குறைந்த பட்ச அளவு:
எண்ணிக்கை: 21 பங்குகள்
தொகை: ரூ.13,965



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us