தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டெக்னிக்கல் அனாலிசிஸ் : டிரெண்டு இன்னும் ஏற்றத்திற்கு சாதகமாக மாறவில்லை

டெக்னிக்கல் அனாலிசிஸ் : டிரெண்டு இன்னும் ஏற்றத்திற்கு சாதகமாக மாறவில்லை

டெக்னிக்கல் அனாலிசிஸ் : டிரெண்டு இன்னும் ஏற்றத்திற்கு சாதகமாக மாறவில்லை


UPDATED : அக் 14, 2026 02:07 AM

ADDED : அக் 13, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 02:07 AM ADDED : அக் 13, 2026 10:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாற்றம் ஏதுமில்லாமல் ஆரம்பித்த நிப்டி சற்று நேரத்தில் ஏறத்தொடங்கி தொடர்ந்து ஏற்றம் கண்டு நாளின் இறுதியில் 358 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. நிப்டியின் நாளின் நிறைவும் உச்சமும் ஒரே அளவாக இருந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.11 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 1.46 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. 21 துறைசார் குறியீடுகளில் 18 குறியீடுகள் ஏற்றத்துடனும் 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில் 'நிப்டி ஐ.டி.,' குறியீடு அதிகபட்சமாக 5.22 சதவிகித ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்-ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 0.19 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,644 நிறுவனங்களின் பங்குகளில் 2,127 ஏற்றத்துடனும், 1,417 இறக்கத்துடனும், 100 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

நிப்டியின் எம்.ஏ.சி.டி., குறியீட்டில் காணப்படும் நேர்மறையான மாற்றம் குறுகிய கால மீட்சிக்கு சாதகமான அறிகுறியாக உள்ளது. இருப்பினும், இது மட்டும் டிரெண்டு மாற்றத்தை உறுதிப்படுத்தாது. மேலும், ஆர்.எஸ்.ஐ., 43.43, ஆர்.ஓ.சி.,-1.48 மற்றும் 'இச்சிமோகு' அமைப்பு ஆகியவை ஒட்டுமொத்த டிரெண்டு இன்னும் ஏற்றத்திற்கு சாதகமாக மாறவில்லை என்பதைக் காட்டுகின்றன.

அதே சமயத்தில் ஸ்டோக்காஸ்ட்டிக் ரெக்கவரி ஏற்றத்திற்கு சற்று சாதகமாக உள்ளதால் நடக்கும் மீட்சியானது தொடர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், பாஸ்ட் ஸ்டோக்காஸ்ட்டிக் '%கே 100' என்ற அளவினை அடைந்திருப்பது குறுகிய காலத்தில் நிப்டி வேகமான ஏற்றம் கண்டிருப்பதை உணர்த்துகின்றது. இது வரும் வர்த்தக நாளில் கன்சாலிடேஷன் அல்லது தற்காலிக பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்பை சுட்டிக்காட்டுகிறது.

Image 1630433



தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 22,500-22,550 முக்கிய சப்போர்ட் லெவலாகவும், 22,900-22,950 உடனடி ரெசிஸ்டென்ஸ் லெவலாகவும் அதனை தொடர்ந்து 23,090-23,100 முக்கிய குறுகிய கால ரெசிஸ்டென்ஸாகவும் உள்ளது. 22,500க்கு கீழே இறங்கினால் 22,200-22,250 வரை செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் நடந்துள்ள மீட்சி நிலையானது என்று கொள்ளாமல் பிரேக்-அவுட் எந்த திசையில் ஆகின்றது என்பதை பொறுத்தே நிப்டியின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்பதே தற்போதைய டெக்னிக்கல் சூழலாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us