கடன் சார்ந்த பண்டு முதலீடுகள் ரூ.1 லட்சம் கோடிக்கு விற்பனை
கடன் சார்ந்த பண்டு முதலீடுகள் ரூ.1 லட்சம் கோடிக்கு விற்பனை
ADDED : அக் 23, 2025 12:17 AM

க டந்த செப்டம்பர் மாதம், கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் இருந்து, 1.02 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளதாக 'ஆம்பி' எனும் இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 7,980 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு திரும்ப பெறப்பட்ட நிலையில், கடந்த மாதம் பெரிய நிறுவன முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகளை அதிகளவில் திரும்பப் பெற்றுள்ளனர்.
கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் மொத்தம் 16 பிரிவுகள் உள்ளன.
இவற்றில், 12 பிரிவுகளில் கடந்த மாதம் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. லிக்விட், மனி மார்க்கெட் மற்றும் குறுகிய கால பண்டுகளில் இருந்து அதிகளவிலான முதலீடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த முதலீடு, கடந்த மாதம் ௫ சதவீதம் குறைந்துள்ளது.