ADDED : அக் 23, 2025 12:19 AM

இ ந்தியாவின் மிகப் பெரிய ஐ.டி., நிறுவனமான இன்போசிஸ், 18,000 கோடி ரூபாய்க்கு தன் பங்குகளை திரும்ப வாங்கிக்கொள்ளும் திட்டத்தை, செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தது.
அந்த பை-பேக் திட்டத்தில், நிறுவனர்கள் பங்கேற்கப் போவதில்லை என்று பங்குச் சந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளது, அந்நிறுவனம்.
இந்த நிறுவனர்களும் அவர் தம் குடும்பமும் இன்போசிஸில், 13.05 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இதில் நாராயணமூர்த்தியிடம் 0.36 சதவீத பங்குகளும், நந்தன் நிலேகனியிடம் 0.98 சதவீத பங்குகளும், இணை நிறுவனரான கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் மனைவி சுதாவிடம் 2.30 சதவீத பங்குகளும் உள்ளன.
இன்போசிஸ் 10 கோடி பங்குகளை தலா 1,800 ரூபாய்க்கு திரும்ப வாங்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இன்போசிஸ் பங்குகளில் முதலீடு செய்துள்ள சிறு முதலீட்டாளர்களுக்கு உரிய பலன் போய் சேர வேண்டும் என்ற காரணத்தினாலேயே, நிறுவனர்கள், இந்த பங்கு பை- பேக்கில் பங்கேற்கவில்லை என்ற செய்தி பங்குச் சந்தையில் உலவுகிறது.