sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

தீபாவளி பங்கு பரிந்துரைகள்

/

தீபாவளி பங்கு பரிந்துரைகள்

தீபாவளி பங்கு பரிந்துரைகள்

தீபாவளி பங்கு பரிந்துரைகள்


ADDED : அக் 19, 2025 01:59 AM

Google News

ADDED : அக் 19, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மேக்ரோ எகனாமிக்ஸ்' சூழலில் உருவாகும் சாதகமான நிலை, ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு போன்ற சாதகமான காரணிகளால், 2025--27 நிதியாண்டுகளில், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வளர்ச்சி 12% (சி.ஏ.ஜி.ஆர்., அளவில்) இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும்; இதனால், அடுத்த ஓராண்டில் நிப்டி 27,000 புள்ளிகள் என்ற இலக்கை அடைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்து, அதன் அடிப்படையில், பின்வரும் பங்குகளை, தீபாவளி பரிந்துரைகளாக தருவதாக ஐ.சி.ஐ.சி., செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

எச்.டி.எப்.சி., பேங்க்


எச்.டி.எப்.சி., ஒருங்கிணைப்புக்கு பிறகு வளர்ச்சி பெறுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருவது, நகர்ப்புற சில்லரை கடன்கள், பிணையற்ற கடன்கள் மற்றும் கிராமப்புறங்களில் கடனுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவை வங்கியின் செயல்பாட்டினை சிறப்பாக் கலாம்.

பரிந்துரைக்கும் விலை: ரூ.940 -- 985

இலக்கு: ரூ.1,150

கிரெடிட்அக்சஸ் கிராமின்


வழங்கப்பட்டுள்ள கடன்களின் தரம் சிறப்பாக இருப்பதும், வசூல்கள் ஸ்திரமாக மாறியிருப்பதும் வளர்ச்சியை தருவதற்கு வாய்ப்புள்ளது. நுண் கடன் மற்றும் சில்லறை கடன்கள் தேவை அதிகரிப்பு எதிர்காலத்தை சிறப்பாக்கும்.

பரிந்துரைக்கும் விலை: ரூ.1,350 - 1,450

இலக்கு: ரூ.1,600

எல் அண்டு டி., @

@

மிகவும் ஸ்திரமான ஆர்டர் வருகை மற்றும் ஆர்டர் கையிருப்பு போன்றவை சீரான லாபத்தை தரக்கூடும்.

பரிந்துரைக்கும் விலை: ரூ.3,600 - 3,800

இலக்கு: ரூ. 4,500

ஏ.ஐ.ஏ., இன்ஜினியரிங்


அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தேவைப்படும் விரிவாக்கத்துக்கான அடித்தளத்தை உருவாக்கி வருவதும்; சிலி நாட்டில் இருந்து ஆர்டர்களை பெற்றுள்ளதும், சுரங்கத்துறை சார்ந்த வியாபாரத்தில் தேவை அதிகரிப்பும் இதன் செயல்பாட்டை சிறப்பாக்கலாம்.

பரிந்துரைக்கும் விலை: ரூ.3,100 - 3,300

இலக்கு: ரூ.4,060

அலைய்டு பிளண்டர்ஸ்


தயாரிப்புகள், புதிய அறிமுகங்கள், புதிய சந்தைகளில் கால்பதித்தல் மற்றும் ஒருங்கிணைப்புக்கான முதலீடுகள் போன்றவை அனுகூலம் தரலாம்.

பரிந்துரைக்கும் விலை: ரூ.515 -- 555

இலக்கு: ரூ.640

கெய்ன்ஸ் டெக்னாலஜி


அதிக லாபம் தரும் எலக்ட்ரானிக்ஸ் மேனுபேக்சரிங், சிப்கள் மற்றும் பி.சி.பி., உற்பத்தியில் ஸ்ட்ராட்டஜிக் முதலீடுகளை செய்துவருதல், இதற்கு அரசாங்கம் தரும் ஆதரவு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் துறையில் நடக்கும் விரிவாக்கங்கள் பலன் தரக்கூடும்.

பரிந்துரைக்கும் விலை: ரூ.6,500 - 6,900

இலக்கு: ரூ.8,900

டேட்டா பேட்டர்ன்ஸ்


பாதுகாப்புத்துறை மற்றும் ஏரோஸ்பேஸ் துறைகளுக்கான சேவைகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக இருத்தல், நிறைவேற்றவேண்டிய ஆர்டர்கள் கைவசம் நிறைய இருத்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் அதிகரிக்கும் தேவை ஆகியவை சாதகமாக இருக்கின்றன.

பரிந்துரைக்கும் விலை: ரூ.2,630 - 2,800

இலக்கு: ரூ.3,560

கிரீன்லாம் இண்டஸ்ட்ரீஸ்


செயல்படும் துறையில் பெரியதொரு நிறுவனமாக இருப்பது, தொடர்ந்து பிளைவுட் மற்றும் பார்ட்டிக்கிள் போர்டுகள் உற்பத்திக்கான விரிவாக்கங்களை செய்துவருவது, லேமினேட்ஸ்களுக்கான தேவை நிலையாக இருப்பது, மற்றும் லாப சதவிகிதம் சற்று அதிகரிப்பது போன்றவை முக்கிய காரணிகள்.

பரிந்துரைக்கும் விலை: ரூ.240--260

இலக்கு: ரூ.300






      Dinamalar
      Follow us