ADDED : நவ 04, 2025 12:50 AM

இந்திய ரூபாய் கடந்த வாரம் கிட்டத்தட்ட 1 சதவீதம் பலவீனமடைந்து, நேற்று டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 88.80 அருகில் நிலை கொண்டது.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ், வட்டி விகிதக் குறைப்பு பற்றி எச்சரிக்கையுடன் பேசியதால், அமெரிக்க டாலர் வலுப்பெற்றது. இது ரூபாய் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது.
ஆனாலும், ஈரான் சபஹார் துறைமுகத்தில், இந்தியாவுக்கு சலுகை வழங்கிய அமெரிக்காவின் 'கோல்டன் கேட்' நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பை உருவாக்கி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி தன் கையிருப்பை குறைக்காமல், பார்வர்டு விற்பனை மூலம் டாலரை விற்று ரூபாயை நிலைநிறுத்த முயற்சி செய்கிறது. இந்நிலையில், குறைந்த கால பார்வையில் 88.50 - 89.10 ரூபாய் வரம்பிற்குள், அழுத்தத்துடன் வர்த்தகமாகலாம்.
நீண்ட காலத்தில், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உறுதியானால், ரூபாய் வலுவடைந்து 87.70 - 87.50 நிலைகளை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது.

