தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/துளிகள்

துளிகள்

துளிகள்


UPDATED : நவ 09, 2026 12:00 AM

ADDED : நவ 08, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 12:00 AM ADDED : நவ 08, 2026 08:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க பங்குகளில்



முதலீடு செய்ய 5 தளங்கள்



இந்திய முதலீட்டாளர்கள் அமெரிக்க நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதற்கான வசதியை ஆன்லைன் தரகு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ‘ஐ.எண்டு.டி., மனி, இன்ட்ராக்டிவ் புரோக்கர்ஸ், வெஸ்டடு பைனான்ஸ், பாசா, ஜீபண்ட்ஸ்’ ஆகிய ஐந்து தளங்கள் வேறுபட்ட தரகு கட்டணங்களுடன் இதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. இவற்றில் வருமான வரி தாக்கலுக்கான உதவி உள்ளிட்ட சேவைகளில் உள்ள வேறுபாடுகள், முதலீட்டு கணக்கை நிர்வகிக்கும் முறை, பண பரிமாற்ற வசதிகளில் இருக்கும் விஷயங்களை கவனித்து பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுத்துறை நிறுவனங்கள்



டிவிடெண்டு அறிவிப்பு



முக்கியமான ஆறு பொதுத்துறை நிறுவனங்கள் இடைக்கால டிவிடெண்டுகளை அறிவித் துள்ளன. கன்டெய்னர் கார்ப்பரேஷன், ஹட்கோ, என்.பி.சி.சி., ரைட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நவ., 11ம் தேதியையும், ஓ.என்.ஜி.சி., மற்றும் என்.எல்.சி., இந்தியா நிறுவனங்கள் நவ., 12ம் தேதியையும் ரெக்கார்டு தேதியாக நிர்ணயித்துள்ளன.

'ஜீரோதா பண்டு ஹவுஸ்'



பெயர் மாற்றம்



மியூச்சுவல் பண்டு நிறுவனமான 'ஜீரோதா பண்டு ஹவுஸ்', தன் பெயரை 'ஜீரோதா கேஸ் பண்ட்ஸ்' என மாற்றியுள்ளது. முன்பு 'ஸ்மால்கேஸ்' என அழைக்கப்பட்ட கேஸ் பிளாட்பார்ம்ஸ் நிறுவனம், ஜீரோதாவின் பரஸ்பர நிதி நிறுவனத்தில் இணை ஆதரவு நிறுவனமாக சேர்ந்ததை தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மியூச்சுவல் பண்டு திட்டங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. எனினும், முதலீட்டாளர்களின் மாதாந்திர முதலீட்டு திட்டங்களில் மாற்றம் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us