UPDATED : நவ 09, 2026 12:00 AM
ADDED : நவ 08, 2026 08:06 PM

பங்கு சந்தையில், கடந்த வாரம் ஐந்து வர்த்தக நாட்களிலும் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியுள்ளனர். தொடர்ந்து 10 வாரங்களாக பங்குகளை விற்று வந்த அன்னிய முதலீட்டாளர்கள், தற்போது இரண்டாவது வாரமாக வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
இதனால், பங்கு சந்தை குறியீடுகள் கணிசமாக உயர்வு கண்டன. இதற்கு மாறாக, உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், பங்கு விலை உயர்வை பயன்படுத்தி லாபத்தை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, வங்கி மற்றும் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
காரணங்கள்
முன்னணி நிறுவனங்களின் லாபம் அதிகரித்து வருவது
முதலீட்டுக்கு ஏற்ற விலையில் பங்குகள் கிடைப்பது
ஏ.ஐ., நிறுவன பங்குகள் சரிந்ததால், இந்திய ஐ.டி., பங்குகள் மீதான ஆர்வம் அதிகரித்தது
கச்சா எண்ணெய் விலை குறைந்ததும், சர்வதேச பதற்றம் தணிந்ததும் முதலீட்டுக்கு சாதகமாக அமைந்தது.
ரூ. 45,960 கோடி
அன்னிய முதலீட்டாளர்கள் 5 நாட்களில் வாங்கியது
ரூ. 24,197 கோடி
உள்நாட்டு நிறுவனங்கள் விற்றது
ரூ. 45,162 கோடி
அக்டோபரில் அன்னிய முதலீட்டாளர்கள் விற்றது
8.82%
சென்செக்ஸ் வார உயர்வு
8.57%
நிப்டி வார உயர்வு
