ஐ.பி.ஓ., வாயிலாக ரூ.1 லட்சம் கோடியை எடுத்துச்சென்ற ஆரம்பகட்ட முதலீட்டாளர்கள்
ஐ.பி.ஓ., வாயிலாக ரூ.1 லட்சம் கோடியை எடுத்துச்சென்ற ஆரம்பகட்ட முதலீட்டாளர்கள்
UPDATED : டிச 13, 2025 01:38 AM
ADDED : டிச 13, 2025 01:37 AM

நம் நாட்டில் நடப்பாண்டில் அதிகளவு ஐ.பி.ஓ.,க்கள் வெளியான நிலையில், 'ஆபர் பார் சேல்' முறையில், நிறுவனங்களின் புரமோட்டர்கள் உள்ளிட்ட ஆரம்பகட்ட முதலீட்டாளர்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் திரட்டியிருப்பது, 'பிரைம் டேட்டாபேஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரியவந்துள்ளது.
ஐ.பி.ஓ.,க்களில் புதிய பங்கு வெளியீடு வாயிலாக திரட்டப்படும் தொகை நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் நிலையில், ஆபர் பார் சேல் வழியாக திரட்டப்படும் தொகை, ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களுக்குச் செல்லும்.
![]() |
இந்நிலையில், 2025ம் ஆண்டில் 102 ஐ.பி.ஓ.க்கள் வாயிலாக, 'புரமோட்டர்கள், பிரைவேட் ஈக்விட்டி பண்டுகள்' மற்றும் ஆரம்பகட்ட முதலீட்டாளர்களும், ஆபர் பார் சேல் முறையை பயன்படுத்தி இவ்வளவு பெரிய தொகையை திரட்டியிருப்பது, இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இதுவே முதன்முறை.
நடப்பாண்டில் இதுவரை புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்ட நிலையில், அதில், 1.11 லட்சம் கோடி ரூபாய் ஆபர் பார் சேல் வழியாக திரட்டப்பட்டிருப்பதாக பிரைம் டேட்டாபேஸின் தரவுகள் கூறுகின்றன.
கடந்த ஆண்டில் ஆபர் பார் சேல் முறையில் திரட்டப்பட்ட 95,000 கோடி ரூபாயைவிட அதிகம் என்றாலும், கடந்த 2020ம் ஆண்டில் இந்த முறையில் திரட்டப்பட்ட 86.7 சதவீதத்தைவிட குறைவு என கூறப்பட்டுள்ளது.
ஆபர் பார் சேல் முறையை பயன்படுத்தி இவ்வளவு பெரிய தொகையை திரட்டியிருப்பது, இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இதுவே முதன்முறை


