ரூ.10 கோடி போட்டு ரூ.10,0-00 கோடி எடுக்கும் புருடென்ஷியல்
ரூ.10 கோடி போட்டு ரூ.10,0-00 கோடி எடுக்கும் புருடென்ஷியல்
ADDED : டிச 13, 2025 01:36 AM

'ஐ .சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வாயிலாக, லண்டனைச் சேர்ந்த 'புருடென்ஷியல் கார்ப்பரேஷன் ஹோல்டிங்ஸ்' நிறுவனம் 1.08 லட்சம் சதவீதம் லாபம் ஈட்ட உள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஏ.எம்.சி., நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக 10,603 கோடி ரூபாய் நிதி திரட்டுகிறது. இந்த ஐ.பி.ஓ.,வில் முழுதும் 'ஆபர் பார் சேல்' மட்டுமே; புதிய பங்கு வெளியீடு எதுவுமில்லை.
புருடென்ஷியல் கார்ப்பரேஷன் நிறுவனம் தன் வசமுள்ள 10 சதவீத பங்குகளை விற்று இந்த நிதியை திரட்டுகிறது. மொத்தம் 4.89 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்நிலையில், இந்த பங்குகளை 20 ஆண்டுகளுக்கு முன், பங்கு ஒன்றுக்கு 2 ரூபாய் என்ற அடிப்படையில், வெறும் 9.79 கோடி ரூபாய்க்கு புருடென்ஷியல் வாங்கியுள்ளது. தற்போது 10,603 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதன் வாயிலாக 1,08,170 சதவீதம் லாபம் ஈட்டுகிறது.

