டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,100-க்கு மேலே சென்றால் ஏற்றம் தொடரலாம்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,100-க்கு மேலே சென்றால் ஏற்றம் தொடரலாம்
UPDATED : டிச 13, 2025 01:31 AM
ADDED : டிச 13, 2025 01:28 AM

நிப்டி
ஆரம்பத்திலிருந்தே ஏற்றத்தில் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில், 148 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் அனைத்து-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 1.18 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியிடு குறைந்தபட்சமாக 0.28 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 2.63 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிகபட்சமாக 0.24 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது.
வர்த்தகம் நடந்த 3,195 பங்குகளில், 2,071 ஏற்றத்துடனும்; 1,036 இறக்கத்துடனும்; 88 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி ஏற்றம் கண்ட போதிலும், வேகமெடுப்பதை காட்டுகிற ஒரு சில இண்டிகேட்டர்கள் மிகவும் சுமாரான நிலையிலேயே இருக்கின்றன. வாங்கும் எண்ணம் கொஞ்சம் அதிகரித்துள்ளது என்ற போதிலும் 26,100-க்கு மேலே சென்று வால்யூமுடன் வர்த்தகமானால் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. செய்திகள் சாதகமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் எனலாம்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
நிப்டி பேங்க்
நிப்டி பேங்க் ஏற்றத்தில் துவங்கி, நன்றாக ஏற ஆரம்பித்து, 10.30 மணிக்கு ஓரளவுக்கு ஏறிய புள்ளிகளை இழந்து, பின் அதே அளவில் தொடர்ந்து வர்த்தகமாகி, நாளின் இறுதியில் 180 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. குறுகிய கால சராசரிகளுக்கு மேலே வர்த்தகமாகும் வரை ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.






