ADDED : நவ 27, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மு தலீட்டு ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சி ஆய்வாளராவதற்கான கல்வி தகுதியில் இருந்த கட்டுப்பாடுகளை செபி தளர்த்தியுள்ளது. சட்டம், பொறியியல் உட்பட எந்தவொரு துறையில் பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும், முதலீட்டு ஆலோசகர் அல்லது ஆராய்ச்சி ஆய்வாளர்களாக பதிவு செய்ய தகுதியுடையவர்கள் என செபி கூறியுள்ளது.
முன்னதாக நிதி, வணிக மேலாண்மை, வர்த்தகம் அல்லது மூலதன சந்தைகள் போன்ற நிதி சார்ந்த துறைகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. கல்வி தகுதி தளர்த்தப்பட்டாலும், என்.ஐ.எஸ்.எம்., சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என செபி அறிவித்துள்ளது. நிபுணத்துவம் உள்ளவர்களும் சந்தையில் நுழையும் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

