காப்பீட்டு துறையின் சவால்கள் கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கம்
காப்பீட்டு துறையின் சவால்கள் கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கம்
UPDATED : செப் 20, 2026 03:06 AM
ADDED : செப் 20, 2026 02:43 AM

இந்திய காப்பீட்டு துறையின் சவால்கள், வாய்ப்புகள் மற்றும் எதிர்கால மாற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கு சென்னை தேவநேய பாவாணர் நுாலக வளாகத்தில் 'மெட்ராஸ் இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட்' நடத்தியது.
இதில், 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சத்யஜித் திரிபாதி, எல்.ஐ.சி., செயல் இயக்குநர் சலில் விஸ்வநாத், 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவன மண்டல மேலாளர் சுரேஷ், மெட்ராஸ் இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் தலைவர் ராஜ்குமார் அரோரா, செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
ஐ.ஆர்.டி.ஏ.ஐ., ஒழுங்குமுறை மாற்றங்கள், டிஜிட்டல் வளர்ச்சி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் வரும் 2047க்குள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் எனும் இலக்கை அடைவதற்கான வழிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
