உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 20, 2026 02:40 AM

அ நிறம் | அளவு
குக்கு டெக்னாலஜிஸ்: செபி அனுமதி
டி ஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ உள்ளடக்க தளமான 'குக்கு எப்.எம்.,' நிறுவனத்தை நிர்வகிக்கும் 'குக்கு டெக்னாலஜிஸ்' நிறுவனம் ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக 2,500 கோடி முதல் 3,500 கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் புதிய பங்குகள் வெளியீடும், குறிப்பிட்ட அளவிலான பங்குகள் 'ஆபர் பார் சேல்' முறையிலும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பங்குகள் வெளியீட்டு வாயிலாக திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் தொழில்நுட்பம், ஏ.ஐ., கட்டமைப்பு, உள்ளடக்க தயாரிப்பு மற்றும் நிறுவன விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
