ADDED : ஏப் 27, 2026 01:01 AM

பங்கு சந்தையில் 'எப் அண்டு ஓ' பிரிவில் உள்ள பங்குகளின் விலையில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்த, 'டைனமிக் பிரைஸ் பேண்டு' முறையை அனைத்து பங்குகளுக்கும் விரிவுபடுத்த செபி திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சந்தையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும், இது தொடர்பாக, என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ., நிறுவனங்களுடன் இணைந்து செபி விரிவான வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கம் என்ன?
1 தற்போது குறிப்பிட்ட சில பங்குகளுக்கு மட்டுமே உள்ள இந்த முறையை இனி, 'எப் அண்டு ஓ' பிரிவில் உள்ள அனைத்து பங்குகளுக்கும் அமல்படுத்த திட்டம்
2 ஒரு பங்கின் விலை குறுகிய காலத்தில் அதீத ஏற்ற இறக்கத்தை சந்தித்தால், இந்த 'டைனமிக்' முறை அதன் வர்த்தகத்தை ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்தும்
3 வெளிநாட்டு சந்தை மாற்றங்கள் அல்லது பெரிய ஆர்டர்களால் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை தடுத்து, சிறு முதலீட்டாளர்களை பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
