ADDED : ஜன 07, 2026 01:36 AM

அமேசான் பே, இந்தியாவில் தனது நிதி சேவைகளை விரிவுபடுத்தும் விதமாக, தனது தளத்தில் பிக்சட் டிபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் பே தளத்தில் செய்யப்படும் டிபாசிட்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை, ஐந்து வங்கிகளுடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது. சவுத் இந்தியன் வங்கி, சிவாலிக் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, ஸ்லைஸ் மற்றும் உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய இரண்டு வங்கியல்லா நிதி நிறுவனங்கள் வாயிலாகவும் இந்த வசதி வழங்கப்படுகிறது.
*வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீட்டில் பிக்சட் டிபாசிட் துவங்கலாம்
*டிபாசிட் கால அளவை பொறுத்து ஆண்டுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்
*மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி
*ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பெண்களுக்கு கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி.

