ADDED : ஜன 07, 2026 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தைகளில் அதிக சந்தை மதிப்பு கொண்ட 'லார்ஜ் கேப்' நிறுவனங்களின் பட்டியலில், புதிதாக ஒன்பது நிறுவனங்கள் இணைந்துள்ளதாக 'ஆம்பி' அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஏ.எம்.சி., எச்.டி.எப்.சி ., ஏ.எம்.சி., முத்தூட் பைனான்ஸ் மற்றும் கனரா வங்கி ஆகிய நான்கு, வங்கி மற்றும் நிதி துறையை சேர்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள இடங்களில் எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஆகியவை சமீபத்தில் ஐ.பி.ஓ., வாயிலாக நிதி திரட்டி, நேரடியாக இந்த பட்டியலுக்கு வந்துள்ளன. மற்ற ஏழு நிறுவனங்களும் நடுத்தர மதிப்பிலான 'மிட் கேப்' பிரிவிலிருந்து முன்னேற்றம் கண்டு லார்ஜ் கேப் பிரிவுக்கு வந்துள்ளன.

